Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டைம் பத்திரிகையின் அட்டை படத்தில் சீன அதிபர் ஜி ஜிங்பிங் இருப்பதாக வைரலாகும் புகைப்படம்

டைம் பத்திரிகையின் அட்டை படத்தில் சீன அதிபர் ஜி ஜிங்பிங் இருப்பதாக வைரலாகும் புகைப்படம்

By: Karunakaran Wed, 23 Dec 2020 12:57:55 PM

டைம் பத்திரிகையின் அட்டை படத்தில் சீன அதிபர் ஜி ஜிங்பிங் இருப்பதாக வைரலாகும் புகைப்படம்

2020 ஆண்டிற்கான சிறந்த நபர்கள் பட்டியலை டைம் பத்திரிகை சமீபத்தில் வெளியிட்டது. இதைத் தொடர்ந்து டைம் பத்திரிகை அட்டை படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அட்டை படத்தில் சீன அதிபர் ஜி ஜிங்பிங், அமெரிக்க அதிபராக தேர்வாகி இருக்கும் ஜோ பைடன் மற்றும் துணை அதிபராக தேர்வாகி இருக்கும் கமலா ஹாரிஸ் என மூவரின் புகைப்படம் இடம்பெற்று உள்ளது.

வைரல் பதிவில் மூவரை புகழும் வாசகம் அடங்கிய தலைப்பு பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. உண்மையில் இந்த படத்தை டைம் பத்திரிகை வெளியிட்டதா என ஆய்வு செய்ததில், அது போட்டோஷாப் மூலம் மாற்றப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

viral photo,chinese president,xi jinping,time magazine ,வைரல் புகைப்படம், சீன ஜனாதிபதி, ஜி ஜின்பிங், டைம் இதழ்

உண்மையில் இந்த ஆண்டின் சிறந்த நபர்கள் பட்டியலில் டைம் பத்திரிகை ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோரை தேர்வு செய்தது. மேலும் இருவரின் முகம் அடங்கிய அட்டை படத்தையும் வெளியிட்டது. இந்த பதிப்பு டிசம்பர் 11 ஆம் தேதி வெளியானது.

இதனை மாற்றியமைத்து சீன அதிபர் ஜி ஜிங்பிங் முகம் இணைக்கப்பட்டு இருக்கிறது. இது உண்மையென நம்பி பலர் அதனை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் டைம் பத்திரிகை அட்டை படத்தில் ஜி ஜிங்பிங் இடம்பெற்றதாக வைரலாகும் படம் மாற்றப்பட்ட ஒன்று என்பது உறுதியாகிவிட்டது. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன. எனவே போலி செய்திகளை பரப்பாதீர்கள்.

Tags :