Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாகிஸ்தானில் அரசியல் கட்சி கூட்டத்தில் இந்திய தேசிய கொடி அசைக்கப்பட்டதாக வைரலாகும் புகைப்படம்

பாகிஸ்தானில் அரசியல் கட்சி கூட்டத்தில் இந்திய தேசிய கொடி அசைக்கப்பட்டதாக வைரலாகும் புகைப்படம்

By: Karunakaran Fri, 23 Oct 2020 4:35:03 PM

பாகிஸ்தானில் அரசியல் கட்சி கூட்டத்தில் இந்திய தேசிய கொடி அசைக்கப்பட்டதாக வைரலாகும்  புகைப்படம்

பாகிஸ்தானில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள 11 கட்சிகள் பிரதமர் இம்ரான் கான் ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி, அங்கு மாபெரும் பேரணி நடக்கிறது. இந்நிலையில் மாபெரும் கூட்டத்தில் இந்திய கொடி அசைக்கப்பட்ட போது எடுக்கப்பட்டதாக கூறி புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படம் கராச்சியில் இம்ரான் கானுக்கு எதிர்கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த வைரல் புகைப்படத்தை ஆய்வு செய்ததில், இந்திய தேசிய கொடியை யாரும் அசைக்கவில்லை என்பதும், அது கம்பத்தில் பறந்தது என தெரியவந்துள்ளது.

indian national flag,political party,pakistan,viral ,இந்திய தேசியக் கொடி, அரசியல் கட்சி, பாகிஸ்தான், வைரல்

மேலும் இணைய தேடல்களில் இதே நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் காணகிடைத்தன. இருப்பினும், இவை எதிலும் இந்திய கொடி இடம்பெறவில்லை. அந்த வகையில் வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. முன்னதாக இதே புகைப்படம் அக்டோபர் 19 தேதியில் தனியார் பத்திரிகை செய்தியில் பயன்படுத்தப்பட்டு இருந்தது.

அதில், எதிர்கட்சியை சேர்ந்த மரியம் பிரதமர் இம்ரானை சாடியது பற்றிய தகவல்களம் இடம்பெற்று இருந்தன. இதனால் பாகிஸ்தான் அரசியல் கூட்டத்தில் இந்தியாவின் தேசிய கொடி அசைக்கப்படவில்லை என்பது உறுதியாகிவிட்டது. போலி செய்திகளை பரப்பாதீர்கள். இதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு விடலாம்.

Tags :