Advertisement

வைரஸ் பரவல் எதிரொலி ... முதல்வர் அறிவுறுத்தல்

By: vaithegi Thu, 22 Dec 2022 3:48:33 PM

வைரஸ் பரவல் எதிரொலி    ...   முதல்வர் அறிவுறுத்தல்


சென்னை: கொரோனா வைரஸின் தாக்கம் சமீபத்தில் தான் சற்று குறைந்து உலக நாடுகள் மீள்வதற்குள், அடுத்த பேரிடியாக இதன் உருமாற்றம் அடைந்த வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி கொண்டு வருகிறது. இதனை அடுத்து பிரேசில், ஜப்பான் மற்றும் சீனாவில் தற்போது அதிக வேகத்தில் BF.7 மற்றும் BF.12 என்ற கொரோனாவின் ஓமைக்ரான் திரிபு வகை வைரஸ்கள் அதிக வேகத்தில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி கொண்டு வருகின்றது.

இதனால் அந்நாடுகளில் கட்டுப்பாடுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த நிலையில், தற்போது இந்தியாவின் ஒடிஷா மற்றும் குஜராத் மாநிலங்களில் சீனாவில் பரவி வரும் வைரஸ் வகை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மாநில அரசுகளுக்கு நோய் தடுப்பு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளார்.

principal,corona,instruction ,முதல்வர் ,கொரோனா ,அறிவுறுத்தல்

இது தொடர்பாக இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் முக்கிய அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சருடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில், வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வரும் சர்வதேச பயணிகளுக்கு நோய் தொற்று சோதனையை தீவிரப்படுத்த வேண்டும்

மேலும் அறிகுறிகள் மற்றும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார். மேலும், மத்திய அரசின் நேற்றைய அறிவிப்பில், பொதுமக்கள் அனைவரும் பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து தகுந்த சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags :
|