Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திவாலில் இருந்து தங்களை பாதுகாக்க வேண்டும் என விர்ஜின் அட்லாண்டிக் விமான நிறுவனம் மனு தாக்கல்

திவாலில் இருந்து தங்களை பாதுகாக்க வேண்டும் என விர்ஜின் அட்லாண்டிக் விமான நிறுவனம் மனு தாக்கல்

By: Karunakaran Thu, 06 Aug 2020 09:59:49 AM

திவாலில் இருந்து தங்களை பாதுகாக்க வேண்டும் என விர்ஜின் அட்லாண்டிக் விமான நிறுவனம் மனு தாக்கல்

கொரோனா வைரஸ் பரவலால் உலகம் முழுவதும் விமான போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால் பல்வேறு விமான நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை அடைந்து வருகின்றன. இதனால் செலவை குறைக்கும் வகையில் பல விமான நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன. இருப்பினும், பல மாதங்களாக விமான போக்குவரத்து நடைபெறாததால் பல்வேறு நாடுகளை சேர்ந்த விமான நிறுவனங்கள் திவாலாகி வருகின்றன.

கடனாளர்கள் தாங்கள் கொடுத்த கடனை செலுத்த நிர்பந்திப்பதால் நிறுவனங்கள் திவால் நிலைக்கு தள்ளப்படும். அந்த வகையில், தற்போது மேலும் ஒரு விமான நிறுவனம் இணைந்துள்ளது. இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ரிச்சர்டு பிரன்சன் என்ற தொழில் அதிபரால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய விமான நிறுவனமான விர்ஜின் அட்லாண்டிக் விமான நிறுவனத்தின் 49 சதவிகித பங்குகளை அமெரிக்காவின் டெல்டா விமான நிறுவனம் வைத்துள்ளது.

virgin atlantic airlines,petition,bankruptcy,america ,விர்ஜின் அட்லாண்டிக் ஏர்லைன்ஸ், மனு, திவால்நிலை, அமெரிக்கா

தற்போது கொரோனா காரணமாக போதிய வருமானம் இல்லாததால் விர்ஜின் அட்லாண்டிக் விமான நிறுவனம் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. இருப்பினும் கடனாளர்களுக்கு வழங்கவேண்டிய தொகையில் பெரும் சிக்கல் நிலவி வருவதால், ஊழியர்களுக்கு அடுத்த மாதம் சம்பளம் வழங்க முடியாத சூழலில் உள்ளது. இந்த நிதி நெருக்கடியில் இருந்து மீண்டுவர மறுகட்டமைப்பு நடவடிக்கைகளுக்காக வெவ்வேறு வழிகளில் கடனாளர்களிடம் இருந்து திரட்டி திட்டத்தை செயல்படுத்த விர்ஜின் அட்லாண்டிக் முடிவு செய்துள்ளது.

பண முதலீடுகள் அக்டோபர் மாத தொடக்கத்தில் தான் நிறுவனத்தை வந்தடையும் என்பதால், அதுவரை நிறுவனத்தை நடத்த போதிய பணம் இல்லாததால் திவாலில் இருந்து தங்களை பாதுகாக்க வேண்டும் என அட்லாண்டிக்கா நிறுவனம் அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. மறுகட்டமைப்பு முதலீடுகள் வர இரண்டுமாத காலம் தேவைப்படும் என்பதால் அதுவரை கடனாளர்களிடமிருந்து நிறுவன சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :