Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆஸ்திரேலியாவில் தங்கியுள்ள 10,000 ஹாங்காங் மக்களுக்கான விசா கெடு நீட்டிப்பு

ஆஸ்திரேலியாவில் தங்கியுள்ள 10,000 ஹாங்காங் மக்களுக்கான விசா கெடு நீட்டிப்பு

By: Karunakaran Mon, 13 July 2020 10:29:02 AM

ஆஸ்திரேலியாவில் தங்கியுள்ள 10,000 ஹாங்காங் மக்களுக்கான விசா கெடு நீட்டிப்பு

ஹாங்காங்குக்கு எதிரான தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீனா அமல்படுத்தியுள்ளது. இதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ், பிரிவினைக்கு குரல் கொடுப்போர், சீனாவுக்கு எதிராக பிரசாரம் செய்வோர் உள்ளிட்டோரை, தேசத் துரோக குற்றச்சாட்டில் கைது செய்ய முடியும்.

இந்நிலையில் இந்த சட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஹாங்காங் மக்களுக்கு அடைக்கலம் அளிக்க பரிசீலிக்கப்பட்டு வருவதாக, ஆஸ்திரேலிய பிரதமர், ஸ்காட் மாரிசன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூறியிருந்தார். தற்போது ஆஸ்திரேலியாவில் ஏற்கனவே பல்வேறு காரணங்களுக்காக தங்கியுள்ள 10,000 ஹாங்காங் மக்களுக்கான விசா கெடுவை நீட்டிப்பதாகவும், இதன் மூலம் அவர்களுக்கு ஆஸ்திரேலிய குடியுரிமை அளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஸ்காட் மாரிசன் தெரிவித்துள்ளார்.

hong kong,australia,visa deadline extension,scott marison ,ஹாங்காங், ஆஸ்திரேலியா, விசா காலக்கெடு நீட்டிப்பு, ஸ்காட் மரிசன்

கல்வி மற்றும் பணி நிமித்தமாக ஆஸ்திரேலியாவில் உள்ள ஹாங்காங் மக்களுக்கு 5 வருடம் விசா நீட்டிப்பு வழங்கவும் இதன் வழியாக நிரந்தர குடியுரிமை அளிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், ஹாங்காங்கை சேர்ந்த தொழிலதிபர்கள் மற்றும் தகுதி வாய்ந்த பணியாளர்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிர்காலத்தில் குடிபெயரவும் வழிவகை செய்யப்படும் எனவும் ஆஸ்திரேலியா அரசு தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய அரசின் இந்த முடிவுக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், ஆஸ்திரேலியா தனது செயலுக்கான முழு விளைவையும் ஏற்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே தேசிய பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்தால் ஆஸ்திரேலியா-சீன உறவில் விரிசல் ஏற்படும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags :