Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விசிட்டிங் கார்டு... மண்ணில் விதைத்தால் துளசி செடியாகும்!

விசிட்டிங் கார்டு... மண்ணில் விதைத்தால் துளசி செடியாகும்!

By: Nagaraj Thu, 03 Sept 2020 10:08:55 AM

விசிட்டிங் கார்டு... மண்ணில் விதைத்தால் துளசி செடியாகும்!

விசிட்டிங் கார்டுதான்... ஆனால் இதை மண்ணில் நட்டு வைத்து தண்ணீர் ஊற்றி வந்தால் துளசி செடியாகிறது. இந்த வித்தியாசமான முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இந்திய வன சேவை அதிகாரி பிரவீன் கஸ்வான் கொடுக்கும் விசிட்டிங் கார்டினை நட்டுவைத்து தண்ணீர் ஊற்றி வந்தால் துளசிச் செடி வளர்வதாக தகவல் வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது

இவரின் ட்விட்டர் பதிவிற்கே பல கோடி கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் இவர் தமிழகத்தின் நீலகிரியில் பள்ளத்தில் சிக்கிய கரடியை மீட்கும் வீடியோ வெளியிட்டு அதிக அளவில் ரசிகர்களைப் பெற்றார்.

visiting card,basil,good effort,compliments ,விசிட்டிங் கார்டு, துளசி செடி, நல்ல முயற்சி, பாராட்டுக்கள்

அந்த வகையில் தற்போது அவர் ஒரு விசிட்டிங் கார்டின் புகைப்படத்தை டிவிட்டர் பதிவிட்டு உள்ளார், காகித அட்டையிலான அந்த விசிட்டிங்க் கார்டில் முகவரி விபரங்கள், போன் விபரங்கள், பெயர் மற்றும் இமெயில் ஐடி உள்ளது.

மேலும் இந்த கார்டை மண்ணில் நடும்போது துளசி செடியாக வளரும் என்று அச்சிடப்பட்டுள்ளது. அதாவது காகித அட்டையின் நடுவே துளசி விதைகள் வைக்கப்பட்டுள்ளதால், இந்த விசிட்டிங்க் கார்டினை மண்ணில் புதைத்து தண்ணீர் ஊற்றி வந்தால் துளசிச் செடியாக வளரும்.

கஸ்வானின் இந்த விசிட்டிங் கார்டானாது ட்விட்டர் வாசிகள் மத்தியில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டும், கமெண்ட்டுகள் செய்யப்பட்டும் வருகின்றது. நல்ல முயற்சி. இதேபோல் பயன்தரும் மூலிகைகளின் விதைகளையும் இதே போன்று முயற்சி செய்தால் நன்மை கிடைக்கும் என்கிறார்கள் சமூக நல ஆர்வலர்கள்.

Tags :
|