Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஓணம் பண்டிகையை முன்னிட்டு... வண்டலூர் பூங்காவில் பார்வையாளர்களுக்கு அனுமதி

ஓணம் பண்டிகையை முன்னிட்டு... வண்டலூர் பூங்காவில் பார்வையாளர்களுக்கு அனுமதி

By: vaithegi Sun, 27 Aug 2023 4:18:48 PM

ஓணம் பண்டிகையை முன்னிட்டு...  வண்டலூர் பூங்காவில் பார்வையாளர்களுக்கு அனுமதி

சென்னை: தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப் பெரிய உயிரியல் பூங்காவாக இருந்து வரும் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, இந்தியாவின் பழமையான பூங்காவாகவும் இருந்து கொண்டு வருகிறது. ஆண்டுதோறும் 20 லட்சம் பார்வையாளர்களுக்கும் மேல் வண்டலூர் பூங்காவிற்கு வருகை தருகின்றனர்.

வண்டலூர் பூங்காவில் பெரியவர்களுக்கு ரூ. 90 கட்டணமாகவும், சிறியவர்களுக்கு ரூ. 50 கட்டணமாகவும் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதிலும், ஞாயிறு, கோடை விடுமுறை போன்ற விடுமுறை நாட்களில் வண்டலூர் பூங்காவிற்கு ஏராளமான பார்வையாளர்கள் வருவது வழக்கமான ஒன்று.

vandalur park,onam festival ,வண்டலூர் பூங்கா,ஓணம் பண்டிகை

அதிலும் பொதுவாக வண்டலூர் பூங்காவுக்கு செவ்வாய்க் கிழமைகளில் மூடப்பட்டிருக்கும். பூங்கா பணியாளர்கள், நிர்வாகிகளுக்கு அன்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் நாளை மறுநாள் அதாவது (ஆகஸ்ட் 29ம் தேதி ) ஓணம் கொண்டாடப்படவுள்ளது.

ஆகையால், ஆகஸ்ட் 29ம் தேதி வண்டலூர் உயிரியல் பூங்கா செயல்படும் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. அன்றைய தினம் விடுமுறை நாள் என்பதால் அதிகளவிலான பார்வையாளர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :