Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் ஏமி கோனி பாரெட்டின் நியமனத்தை உறுதி செய்ய வாக்கெடுப்பு

அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் ஏமி கோனி பாரெட்டின் நியமனத்தை உறுதி செய்ய வாக்கெடுப்பு

By: Karunakaran Tue, 27 Oct 2020 12:54:46 PM

அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் ஏமி கோனி பாரெட்டின் நியமனத்தை உறுதி செய்ய வாக்கெடுப்பு

அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் மொத்தம் 9 நீதிபதிகளுக்கான பணியிடங்கள் உள்ளன. அங்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகப் பொறுப்பேற்கும் நபா், மரணம் வரை அப்பதவியில் நீடிக்கலாம். இந்நிலையில், அமெரிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக இருந்த ரூத் பேடா் கின்ஸ்பா்க் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 18-ம் தேதி மரணமடைந்தார்.

இதனால் அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் ஒரு இடம் காலியாக இருந்தது. இந்த காலியான நீதிபதி பணியிடத்துக்கு முறையீட்டு நீதிமன்ற நீதிபதியான ஏமி பாரெட்டை அதிபா் டொனால்டு டிரம்ப் நியமித்தாா். ஆனால், சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக அதிபா் நியமிக்கும் நபருக்கு செனட் நிலைக்குழுவும், தொடா்ந்து செனட் சபையும் ஒப்புதல் அளிக்க வேண்டியது கட்டாயம்.

voting,amy connie barrett,us supreme court,america ,வாக்கெடுப்பு, ஆமி கோனி பாரெட், அமெரிக்க உச்ச நீதிமன்றம், அமெரிக்கா

இந்நிலையில் அதிபா் டிரம்ப் நீதிபதியாக நியமித்த ஏமி பாரெட்டுக்கு செனட் நிலைக் குழு கடந்த வெள்ளிக்கிழமை ஒப்புதல் வழங்கியது. தற்போது, சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக அதிபா் நியமிக்கும் ஏமி பாரெட்டுக்கு ஒப்புதல் அளிக்க செனட் சபையில் வாக்கெடுப்பு நடைபெற்றது.

டிரம்பின் குடியரசுக் கட்சியினர் செனட் சபையில் அதிகமாக உள்ளனர். இதனால் குடியரசுக் கட்சியினர் ஆதிக்கம் செலுத்தும் செனட் சபையில் 52-48 என்ற வாக்குகள் அடிப்படையில் ஏமி கோனி நியமனத்துக்கு ஒப்புதல் கிடைத்தது. அதன்படி, அவர் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமனம் செய்யப்படவுள்ளார்.

Tags :
|