Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குடியரசு கட்சி மாநாட்டிற்கு பின் ஜோ பிடனுக்கு வாக்காளர் மத்தியில் ஆதரவு சற்று குறைந்தது

குடியரசு கட்சி மாநாட்டிற்கு பின் ஜோ பிடனுக்கு வாக்காளர் மத்தியில் ஆதரவு சற்று குறைந்தது

By: Karunakaran Sun, 30 Aug 2020 12:44:57 PM

குடியரசு கட்சி மாநாட்டிற்கு பின் ஜோ பிடனுக்கு வாக்காளர் மத்தியில் ஆதரவு சற்று குறைந்தது

அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் ஆகிய இருவரும் எதிர்த்து போட்டியிடுகின்றனர். தற்போது, இருவரும் நாடு முழுவதும் பிரசாரத்தை தீவிரப்படுத்தி வாக்கு வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். பிரச்சாரத்திற்கு மத்தியில் தேர்தல் கருத்துக்கணிப்புகளும் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.

பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் ஜோ பிடன் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளதாகவே தெரிவிக்கின்றன. தற்போது குடியரசு கட்சி மாநாட்டில் டிரம்ப் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது. அதில் தேசிய அளவில் ஜோ பிடனின் முன்னணியானது சற்று குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.

voter support,joe biden,republican convention,america ,வாக்காளர் ஆதரவு, ஜோ பிடன், குடியரசுக் கட்சி மாநாடு, அமெரிக்கா

வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் ஜோ பிடன், 50 சதவிகித வாக்காளர்களின் ஆதரவோடு முன்னிலை வகித்தார். டிரம்பிற்கு 44 சதவிகித வாக்காளர்கள் ஆதரவு அளித்தனர். குடியரசுக் கட்சி மாநாட்டைத் தொடங்குவதற்கு முந்தைய நாள் நடந்த வாக்கெடுப்பில் ஜோ பிடன் 52-42 என முன்னணியில் இருந்தார்.

தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. இதனால் 6 முக்கிய காரணிகளை முன்னிறுத்தி பிரச்சாரத்தை தீவிரப்படுத்த டிரம்ப் திட்டமிட்டுள்ளார். ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் பதவிக்கு தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

Tags :