Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாடாளுமன்றத்தில் நிதி வசதி குறித்து இன்று வாக்கெடுப்பு

நாடாளுமன்றத்தில் நிதி வசதி குறித்து இன்று வாக்கெடுப்பு

By: Nagaraj Fri, 28 Apr 2023 8:03:54 PM

நாடாளுமன்றத்தில் நிதி வசதி குறித்து இன்று வாக்கெடுப்பு

கொழும்பு: நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு... சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழான இணக்கப்பாட்டு ஒப்பந்தத்தின் ஏற்பாடுகளை அமுல்படுத்துவதற்கான தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இன்று(வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.

இந்த வாக்கெடுப்பின் போது இணக்கப்பாட்டு ஒப்பந்த ஏற்பாடுகளை பெரும்பான்மையுடன் நிறைவேற்றுவதற்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவுகளைப் பெற்றுக் கொள்வதற்காக அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட சுமார் 3 பில்லியன் டொலர் பெறுமதியான 48 மாத கால நீட்டிக்கப்பட்ட நிதி வசதி தொடர்பான ஏற்பாடு கடந்த மார்ச் 22ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த ஏற்பாட்டினை அமுல்படுத்துவதற்குத் தேவைப்படுகின்ற சகல அங்கீகாரமும் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சுக்கு வழங்கப்பட வேண்டுமென இந்தத் தீர்மானத்தினால் முன்வைக்கப்பட்டுள்ளது.

Tags :