Advertisement

பாஜவில் வி.பி.துரைசாமிக்கு தமிழக துணைத்தலைவர் பதவி

By: Nagaraj Fri, 03 July 2020 4:50:08 PM

பாஜவில் வி.பி.துரைசாமிக்கு தமிழக துணைத்தலைவர் பதவி

திமுகவிலிருந்து வெளியேறி பாஜவில் சேர்ந்த வி.பி.துரைசாமி தமிழக பா.ஜ. துணைத்தலைவராகி உள்ளார்.

தமிழக பாஜ., துணைத்தலைவர்களாக வி.பி. துரைசாமி, வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் உள்பட 10 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக பாஜ., கட்சியின் புதிய நிர்வாகிகள் பட்டியலை அக்கட்சியின் மாநிலத் தலைவரான எல்.முருகன் வெளியிட்டுள்ளார்.

appointment,bjp executives,announcement,vp thuraisamy ,நியமனம், பாஜ,. நிர்வாகிகள், அறிவிப்பு, வி.பி.துரைசாமி

அதில் திமுக.,வில் துணை பொதுச்செயலராக இருந்து நீக்கப்பட்டு, சமீபத்தில் பாஜ.,வில் இணைந்த வி.பி.துரைசாமி பாஜ., மாநில துணைத்தலைவராக நியமிக்கப்பட்டார்.
மேலும், பொதுச் செயலாளராக இருந்த வானதி சீனிவாசன், எம்.சக்கரவர்த்தி, நயினார் நாகேந்திரன், கே.எஸ்.நரேந்திரன், எம்.முருகானந்தம், எம்.என்.ராஜா, ஏ.ஆர்.மகாலட்சுமி, கனகசபாபதி, புரட்சிக்கவிதாசன் ஆகியோரும் துணைத்தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்.

Tags :