Advertisement

ரஷ்யாவிற்கு எதிராகவே திரும்பிய வாக்னர் ஆயுதக்குழு

By: Nagaraj Sat, 24 June 2023 8:40:11 PM

ரஷ்யாவிற்கு எதிராகவே திரும்பிய வாக்னர் ஆயுதக்குழு

உக்ரைன்: ரஷ்யா எதிராக திரும்பியது... உக்ரைன் போரில் ரஷ்யா ஈடுபடுத்தி வந்த வாக்னர் ஆயுதக்குழு ரஷ்யாவிற்கு எதிராகவே திரும்பியது.

ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்கே ஷைகுவிற்கும், வாக்னர் தளபதி பிரிகோஷினுக்கும் அண்மை காலமாக கருத்து மோதல் இருந்து வந்தது.

ரஷ்ய படைகள் நிகழ்த்திய வான் தாக்குதலில் வாக்னர் வீரர்கள் 2,000 பேர் கொல்லப்பட்டதாக குற்றம்சாட்டிய பிரிகோஷின், அதற்கு பழி தீர்க்க தங்கள் படை வீரர்கள் 25,000 பேர் ரஷ்யாவிற்குள் ஊடுருவிவிட்டதாக மிரட்டல் விடுத்தார்.

presidential palace,important,government buildings,railway stations,russian army ,அதிபர் மாளிகை, முக்கியம், அரசு கட்டடங்கள், ரயில் நிலையங்கள், ரஷ்ய ராணுவம்

ரஸ்டோவ் நகரிலுள்ள ராணுவ தலைமையகத்தில் தான் இருப்பதாகவும், பாதுகாப்புத்துறை அமைச்சர் நேரில் வந்து தன்னை சந்திக்குமாறும் பிரிகோஷின் வீடியோ வெளியிட்டார்.

இதையடுத்து மாஸ்கோவில் உள்ள அதிபர் மாளிகை, முக்கிய அரசு கட்டடங்கள், ரயில் நிலையங்களில் ரஷ்ய ராணுவம் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.

Tags :