Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நடைபயண பின்னணியில் சினிமா பாடல்... காப்புரிமை மீறல் புகார்

நடைபயண பின்னணியில் சினிமா பாடல்... காப்புரிமை மீறல் புகார்

By: Nagaraj Sun, 06 Nov 2022 11:21:53 AM

நடைபயண பின்னணியில் சினிமா பாடல்... காப்புரிமை மீறல் புகார்

ஐதராபாத்: ராகுல்காந்தி நடைபயணத்தில் கே.ஜி.எப் 2 படத்தில் இடம்பெறும் பாடலை பின்னணியில் பயன்படுத்தி வீடியோ வெளியிட்டதற்காக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தேச ஒற்றுமையை வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி ‘பாரத் ஜோடோ’ என்கிற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். ராகுல் காந்தி நடைபயணம் செல்லும் வீடியோக்களை காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றப்பட்டு வருகிறது.

kgf 2 song,rahul gandhi,case , கே.ஜி.எப் 2 பாடல், ராகுல் காந்தி, வழக்கு

அந்த வகையில் ஒரு வீடியோவில் யாஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எப் 2 படத்தில் இடம்பெறும் பாடலை பின்னணியில் பயன்படுத்தி உள்ளனர். அது தங்களிடம் முறையான அனுமதி பெறாமல் பயன்படுத்தப்பட்டு உள்ளதாக எம்.ஆர்.டி மியூசிக் நிறுவனம் ராகுல் காந்தி உள்பட மூவர் மீது இந்த காப்புரிமை மீறல் புகாரை கொடுத்துள்ளது.

நிறைய தொகை கொடுத்து கே.ஜி.எப் 2 படத்தின் பாடல் உரிமையை தாங்கள் வாங்கி உள்ளதாகவும், அதனை தங்களது அனுமதி இன்றி காங்கிரஸ் கட்சியினர் தங்களது வீடியோவில் பயன்படுத்தி உள்ளதால் நான்கு பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக எம்.ஆர்.டி மியூசிக் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :