Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வெள்ளிக்கோளின் மேற்பரப்பில் அமில மேகங்களின் சுவர் போன்ற அமைப்பு

வெள்ளிக்கோளின் மேற்பரப்பில் அமில மேகங்களின் சுவர் போன்ற அமைப்பு

By: Nagaraj Mon, 10 Aug 2020 2:06:17 PM

வெள்ளிக்கோளின் மேற்பரப்பில் அமில மேகங்களின் சுவர் போன்ற அமைப்பு

விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு... 35 ஆண்டுகளாக கவனிக்கப்படாமல் இருந்த வெள்ளிக்கோளின் மேற்பரப்பில் உள்ள அமில மேகங்களின் சுவர் போன்ற அமைப்பை ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ஜப்பானின் விண்வெளி நிறுவனமான ஜாக்ஸாவின் விஞ்ஞானிகள் வெள்ளிக்கோளின் மேற்பரப்பில் மறைந்திருக்கும் அமில மேகங்களின் மாபெரும் தொகுப்பைக் கண்டுபிடித்துள்ளனர்.

சுமார் 7,500 கிலோமீட்டர் வரை நீடிக்கும் இந்த வளிமண்டல மேகக்கூட்டம் ஜெட் விமானங்களின் வேகத்தில் வெள்ளிக்கோளை சுற்றிக் வருவது தெரியவந்துள்ளது.

acid clouds,study,atmosphere,infrared ,அமில மேகங்கள், ஆய்வு, வளி மண்டலம், அகச்சிவப்பு

கேனரி தீவுகளில் உள்ள கலிலியோ தேசிய தொலைநோக்கி (டி.என்.ஜி) உதவியுடன் 2012 இல் எடுக்கப்பட்ட அகச்சிவப்பு புகைப்படங்களை ஆராய்ந்தபோது இவை கண்டறியப்பட்டுள்ளன.
அகச்சிவப்பு படங்களில் வானியலாளர்கள் வளிமண்டலத்தின் பகுதிகளை ஆய்வுக்குட்படுத்தும் போது வளிமண்டலத்தின் கீழ் பகுதியில் அமில மேகங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய ஜேவியர் பெரால்டா, “மேகங்களின் மேற்பரப்பை சுமார் 43 மைல் உயரத்தில் உணரும் புற ஊதா படங்களில் அமில மேகங்களின் அலை தன்மையை உறுதிப்படுத்துவது முக்கியத்துவம் வாய்ந்தது.” எனத் தெரிவித்தார்.

Tags :
|