Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இனப்படுகொலை பற்றிய விசாரணை வேண்டும்; புதிய ஜனநாயக கட்சி தலைவர் ஜக்மீட் சிங் வேண்டுகோள்

இனப்படுகொலை பற்றிய விசாரணை வேண்டும்; புதிய ஜனநாயக கட்சி தலைவர் ஜக்மீட் சிங் வேண்டுகோள்

By: Nagaraj Sun, 26 July 2020 11:38:25 AM

இனப்படுகொலை பற்றிய விசாரணை வேண்டும்; புதிய ஜனநாயக கட்சி தலைவர் ஜக்மீட் சிங் வேண்டுகோள்

இனப்படுகொலை பற்றிய விசாரணைகள் இடம் பெற வேண்டும்... இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை குறித்து விசாரணைகள் இடம்பெறவேண்டும் என கனடா புதிய ஜனநாயக கட்சி தலைவர் ஜக்மீட் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கறுப்பு ஜூலையை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 1983 ஜூலை 23 ம் திகதிக்கும் 29 திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் இலங்கையில் இனப்படுகொலை நடவடிக்கைகள் இடம்பெற்றன. எண்ணிக்கை தெரியாத காடையர்கள் கும்பல்கள் இலங்கையின் பல பகுதிகளில் இனக்கலவரத்தில் ஈடுபட்டன என அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதன் போது 3000 பேர் வரை கொல்லப்பட்டனர், 150,000க்கும் அதிகமானவர்கள் தங்கள் வீடுகளை இழந்தனர் என ஜக்மீட் சிங் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வுகள் 26 வருட உள்நாட்டு யுத்தத்தை ஆரம்பித்தன. ஆயிரக்கணக்கான தமிழர்கள் வெளிநாடுகளில் வாழவேண்டிய நிலையை ஏற்படுத்தின எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இனப்படுகொலை மற்றும் உள்நாட்டு யுத்தத்தினால் ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் இடம்பெயர்வு போன்றவற்றை இன்னமும் அனுபவித்துக் கொண்டிருப்பவர்களின் துயரங்களை நாங்கள் அங்கீகரிக்கும் அதேவேளை எங்களை பிளவுபடுத்தக்கூடிய வெறுப்பின் வலிமை குறித்து நாங்கள் அலட்சியமாகயிருக்க கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

genocide,investigation,international,tamil people ,
இனப்படுகொலை, விசாரணை, சர்வதேசம், தமிழ் மக்கள்

இலங்கையின் உள்நாட்டுப்போரின் இருண்ட நாட்கள் நல்லிணக்கம், நீதி மற்றும உண்மை ஆகியவற்றை ஏற்படுத்துவதிலும், இன்னமும் துயரத்தை அனுபவிப்பவர்களினது காயங்களை ஆற்றுவதிலும், நாங்கள் எங்கு வாழ்ந்தாலும் எங்களுக்கு கூட்டு பொறுப்புள்ளதை நினைவுபடுத்தி நிற்கின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

கறுப்பு ஜூலையின் 37 வருடத்தின் போது இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலை குறித்து சர்வதேச சுயாதீன விசாரணையை மேற்கொள்ளுமாறு கனடாவின் புதிய ஜனநாயக கட்சி ஐக்கிய நாடுகள் சபையை கேட்டுக் கொள்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஸ்ரீலங்காவில் 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இன்கலவரமான கறுப்பு ஜூலையை நினைவுகூர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் பொறுப்புக்கூறும் பொறிமுறை குறித்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags :