Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குழந்தைகளின் ஊட்டச்சத்தை அதிகரிக்கணுமா... காய்கறிசாதம் செய்முறை

குழந்தைகளின் ஊட்டச்சத்தை அதிகரிக்கணுமா... காய்கறிசாதம் செய்முறை

By: Nagaraj Tue, 27 June 2023 7:11:13 PM

குழந்தைகளின் ஊட்டச்சத்தை அதிகரிக்கணுமா... காய்கறிசாதம் செய்முறை

சென்னை: காய்கறிகள் சாப்பிட மறுக்கும் குழந்தைகளின் ஊட்டச்சத்தை அதிகரிக்க காய்கறி சாதம் செய்து கொடுங்கள்.

தேவையான பொருட்கள்
சாதம் - 2 கோப்பைகேரட் - 1பீன்ஸ் - 50 கிராம்குட மிளகாய் - 1முட்டைக்கோஸ் - 100 கிராம்பச்சை மிளகாய் - 2பெரிய வெங்காய் - 1இஞ்சி பூண்டு விழுது - 1பட்டை - 2கிராம்பு - 3பிரியாணி இலை - 1ஏலக்காய் - 1தக்காளி சாஸ் - 2 தேக்கரண்டிநெய் - 2 தேக்கரண்டிஎண்ணெய் - 1 தேக்கரண்டிமிளகு - 1/4 தேக்கரண்டிசர்க்கரை - 1/2 தேக்கரண்டிஉப்பு - தேவையான அளவு

vegetable rice,pepper powder,ginger garlic paste,bark,cloves ,காய்கறி சாதம், மிளகு தூள், இஞ்சி பூண்டு விழுது, பட்டை, கிராம்பு

செய்முறை: சாதத்தை கொஞ்சம் விறைப்பாக வடித்து ஆற வைக்கவும். கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ், குட மிளகாய், பெரிய வெங்காயம் ஆகியவற்றை பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை ஆகியவற்றைப் போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். பிறகு நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, பச்சை வாசனைப் போகும் வரை வதக்கவும்.

பிறகு நறுக்கிய காய்கறிகளைப் போட்டு சிறு தணலில் நன்றாக வதக்கவும். அதனுடன் சிறிது சர்க்கரை, தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி வைத்து வேக விடவும். அடிக்கடி கிளறி விடவும். பிறகு தக்காளி சாஸ் சேர்த்து வதக்கவும்.

அடுத்து ஆறிய சாதத்தைப் போட்டு குழையாமல் கிளற வேண்டும். இதனுடன் மிளகு தூளைச் சேர்த்து கிளறி, சிறிது நேரம் சிறு தணலில் வைத்து அடுப்பிலிருந்து இறக்கவும்.

Tags :
|