Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சூறாவளி காற்று வீசக்கூடும் .. மீனவர்களுக்கான எச்சரிக்கை

சூறாவளி காற்று வீசக்கூடும் .. மீனவர்களுக்கான எச்சரிக்கை

By: vaithegi Mon, 23 Jan 2023 3:00:36 PM

சூறாவளி காற்று வீசக்கூடும் ..   மீனவர்களுக்கான எச்சரிக்கை

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுயிருப்பதாவது,மீனவர்களுக்கான எச்சரிக்கை 23.01.2023: குமரிக்கடல் பகுதிகளில் வடகிழக்கு திசையிலிருந்து பலத்தக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து 24.01.2023; தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என அறிவித்துள்ளது.

chennai meteorological centre,fishermen , சென்னை வானிலை ஆய்வு மையம், மீனவர்கள்

அதனைத்தொடர்ந்து 25.01.2023 மற்றும் 26.01.2023: தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேலும் 27.01.2023: இலங்கையை ஓட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Tags :