Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள மீனவர்களுக்கான எச்சரிக்கை

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள மீனவர்களுக்கான எச்சரிக்கை

By: vaithegi Thu, 18 Aug 2022 3:13:30 PM

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள மீனவர்களுக்கான எச்சரிக்கை

சென்னை : சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 18.08.2022: ஆந்திர கடலோர பகுதிகள், குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

இதையடுத்து 19.08.2022: மத்தியமேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய வட ஆந்திர கடலோர பகுதிகள், தெற்கு வங்க கடல் பகுதிகள் மற்றும் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

warning,chennai meteorological department ,எச்சரிக்கை ,சென்னை வானிலை மையம்

இதை தொடர்ந்து 20.08.2022: மத்தியமேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய வட ஆந்திர கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மேலும் 21.08.2022, 22.08.2022: மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags :