Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஒன்ராறியோவில் பொது போக்குவரத்தில் பயணிப்பவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

ஒன்ராறியோவில் பொது போக்குவரத்தில் பயணிப்பவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

By: Nagaraj Fri, 09 Sept 2022 09:28:10 AM

ஒன்ராறியோவில் பொது போக்குவரத்தில் பயணிப்பவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

கனடா: கடுமையான எச்சரிக்கை... கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் பொதுப் போக்குவரத்தில் செல்வோருக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுப் போக்குவரத்தில் செல்வோர் கட்டணம் செலுத்தாது பயணங்களை மேற்கொள்ள முயற்சித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கட்டணம் செலுத்தாது பயணங்களை மேற்கொள்வோருக்கு கூடுதல் தொகை அபராதம் விதிப்பதற்காக புதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக ஒன்ராறியோ பொதுப் போக்குவரத்து சேவையான கோ ட்ரான்சிட் (GO Transit ) தெரிவித்துள்ளது.

பயணிகள் தொடர்ச்சியாக கட்டண ஏய்ப்பில் ஈடுபட்டு பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்தால் அவ்வாறானவர்களுக்கு படிப்படியாக அபராத தொகையை உயர்த்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. முதல் தடவை கட்டணம் செலுத்தாதவர்களுக்கு 35 டொலர்களும், இரண்டாவது தடவைக்கு 50 டொலர்களும், மூன்றாம் தடவைக்கு 100 டொலர்களும் அபராதம் விதிக்கப்பட உள்ளது.

fee evasion,loss of income,warning,court,lawsuit ,கட்டண ஏய்ப்பு, வருமான இழப்பு, எச்சரிக்கை, நீதிமன்றம், வழக்கு

நான்கு அல்லது அதற்கும் மேற்பட்ட தடவைகள் பொதுப் போக்குவரத்தில் பயணிக்கும் போது கட்டண ஏய்ப்பில் ஈடுப்பட்டால் அவர்களுக்கு குறைந்தபட்சம் 200 டொலர்கள் அபராதம் விதிக்கப்படும் எனவும், நீதிமன்றில் வழக்குத் தொடரப்படும் எனவும் 5000 டொலர்கள் வரையில் அபராதம் விதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்யும் போது கட்டண ஏய்ப்பில் ஈடுபடுவதனால் பாரியளவு வருமான இழப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Tags :
|