Advertisement

WhatsApp பயனர்களுக்கு எச்சரிக்கை

By: vaithegi Tue, 12 July 2022 8:10:50 PM

WhatsApp பயனர்களுக்கு எச்சரிக்கை

இந்தியா: உலகின் முன்னணி தகவல் தொடர்பு செயலியான வாட்ஸ்அப் தனது பல கோடிக்கணக்கான பயனர்களுக்கு கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதில் இணையத்தில் உலா வரும் வாட்ஸ்அப் செயலியின் போலியான பாதிப்புகள் குறித்து பயனர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

இது குறித்து வாட்ஸ்அப்பின் CEO கேத்கார்ட் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், வாட்ஸ்அப் பயனர்கள் பெரும் சிக்கலை சந்திக்கக்கூடும் என்பதால் மாற்றியமைக்கப்பட்ட இந்த பதிப்பை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த வெர்ஷன் பல தொழில்நுட்பங்கள் மூலம் பயனர்களை ஏமாற்றுவதாக கண்டறியப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் போன்ற சேவைகளை வழங்குவதாக கூறும் சில போலியான செயலிகளை இந்த நிறுவனத்தின் பாதுகாப்பு ஆய்வுக் குழு கண்டறிந்துள்ளது.

whatsapp,processor ,வாட்ஸ்அப்,செயலி

அதன்படி, HeyMods என்ற டெவலப்பரின் Hey WhatsApp போன்ற பயன்பாடுகள் ஆபத்தானவை என்றும், மக்கள் அவற்றை பதிவிறக்குவதை தவிர்க்க வேண்டும் என்வும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த பயன்பாடுகள், பயனர்களுக்கு சில புதிய அம்சங்களை வழங்குவதாக உறுதியளிக்கின்றன. ஆனால் இது தொலைபேசிகளில் சேமிக்கப்பட்ட தனிப்பட்ட தகவல்களை திருடும் மோசடியில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது WhatsAppன் இந்த போலி வெர்ஷன் Play Storeல் கிடைக்கவில்லை என்பதால் அதிகாரப்பூர்வமற்ற ஆதாரங்களில் இருந்து அந்த பயன்பாடுகளை தங்கள் தொலைபேசியில் பதிவிறக்க முயற்சிக்கும் பயனர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :