Advertisement

கனடாவின் பொது சுகாதார அமைப்பு விடுத்த எச்சரிக்கை

By: Nagaraj Sun, 13 Nov 2022 1:17:36 PM

கனடாவின் பொது சுகாதார அமைப்பு விடுத்த எச்சரிக்கை

கனடா: கனடாவில் ப்ளூ மற்றும் RSV என்று அழைக்கப்படும் சுவாசப்பாதையில் தொற்றை உருவாக்கும் Respiratory syncytial virus என்னும் வைரஸ் தொற்று ஆகியவை, வழக்கமான சீஸனில் இருப்பதைவிட அதிகரித்துள்ளதாக கனடாவின் பொது சுகாதார ஏஜன்சி தெரிவித்துள்ளது.

மருத்துவமனைகள் ப்ளூ, கோவிட் மற்றும் RSV வைரஸ் தொற்று காரணமாக நிரம்பி வழிந்துவரும் நிலையில், ஒன்ராறியோ மற்றும் மணிடோபாவிலுள்ள சில மருத்துவர்கள், அறிவியலாளர்கள் மற்றும் மருத்துவமனை அதிகாரிகள், மாஸ்க் அணியும் கட்டுப்பாட்டை மீண்டும் கொண்டு வருமாறு பொது சுகாதார அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

vaccine,protection,action,mask,corona,spread ,தடுப்பூசி, பாதுகாப்பு, நடவடிக்கை, மாஸ்க், கொரோனா, பரவல்

இந்நிலையில், கனடாவின் முதன்மை பொது சுகாதார அலுவலரான Dr. Theresa Tam, மாஸ்க் அணிதல், சுவாசப்பாதை தொற்றுக்களை உருவாக்கும் வைரஸ்களிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள உதவும் என்று கூறியுள்ளார்.

தடுப்பூசி போன்ற மற்ற பாதுகாப்பு நடவடிக்கைகளுடன், மாஸ்க் அணிதலையும் சேர்த்துக்கொள்ளும்போது, அது நல்ல ஒரு மாற்றத்தை உருவாக்கும், அதனால் தொற்று அதிகரிப்பது குறைந்து, மருத்துவமனைகளும் அதிக அழுத்தத்திற்குள்ளாக்கப்படுவது சற்று தவிர்க்கப்படும் என்று கூறியுள்ளார் அவர்.

Tags :
|
|
|