Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தேசிய மருத்துவ ஆணையம் கலந்தாய்வில் கலந்துக் கொள்ளும் மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுப்பு

தேசிய மருத்துவ ஆணையம் கலந்தாய்வில் கலந்துக் கொள்ளும் மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுப்பு

By: vaithegi Thu, 20 July 2023 3:35:26 PM

தேசிய மருத்துவ ஆணையம் கலந்தாய்வில் கலந்துக் கொள்ளும் மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுப்பு

சென்னை: தேர்வு செய்த கல்லூரியில் சேராவிட்டால் நீட் எழுத தடை ... எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான முதற்கட்ட கலந்தாய்வு இன்று தொடங்கும் என்று மருத்துவ கலந்தாய்வுக் குழு அறிவித்திருந்தது. அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு ஜூலை 20 முதல் செப்.30ம் தேதி வரை 4 சுற்றுகளாக நடைபெறும். எம்.பி.பி.எஸ் ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதல்கட்ட கலந்தாய்வு வருகிற ஜூலை 27, 28ம் தேதி ஆன்லைனில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து 2-ம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 16, 17ம் தேதிகளில் நடத்தப்பட்டு வருகிற ஆகஸ்ட் 18ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும். 3ம் கட்ட கலந்தாய்வு செப்டம்பர் 6, 7ம் தேதிகளில் நடத்தப்பட்டு செப்டம்பர் 8ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அகில இந்திய ஒதுக்கீட்டில் தேர்வு செய்த கல்லூரியில் சேராவிட்டால் நீட் தேர்வு எழுத ஓராண்டு தடை விதிக்கப்படும் என தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்து உள்ளது.

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வில் கல்லூரிகளை தேர்வு செய்துவிட்டு, சேராவிட்டால் நீட் தேர்வு எழுத ஓராண்டு தடை விதிக்கப்படும் என 2023-24ஆம் ஆண்டிற்கான அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான மருத்துவ கலந்தாய்வு இன்று தொடங்கிய நிலையில், தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்து உள்ளது.

warning,national medical commission,neet exam ,எச்சரிக்கை ,தேசிய மருத்துவ ஆணையம் ,நீட் தேர்வு


மேலும் இதுபோன்ற விவகாரத்தில் முன்பணத் தொகை வழக்கமாக திருப்பித் தரப்பட மாட்டாது என ஏற்கனவே நடைமுறை உள்ளது. தற்போது கூடுதலாக நீட் தேர்வெழுத ஓராண்டு தடை விதித்து உத்தரவிடப்பட்டு உள்ளது. கடைசி ரவுண்டில் சீட் எடுத்து சேராவிட்டால் இந்த நடவடிக்கை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அகில இந்திய ஒதுக்கீட்டில் இடங்களை தேர்வு செய்துவிட்டு மாநில ஒதுக்கீட்டில் சேருவதால் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. எனவே அதன்படி, நீட் தேர்வு ஓராண்டு தடை விதித்தும், மருத்துவ கல்லூரியில் சேர தடை விதித்தும் உத்தரவிடப்பட்டு உள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழ்நாடு உட்பட அனைத்து மாநில மருத்துவ கல்லூரிகளுக்கும் 15% இடங்கள் வழங்கப்படுகின்றன.

Tags :