Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிளாஸ்டிக் தடையை மீறும் நிறுவனங்களுக்கு ஜூலை 10 தேதி வரை ... எச்சரிக்கை நோட்டீஸ்

பிளாஸ்டிக் தடையை மீறும் நிறுவனங்களுக்கு ஜூலை 10 தேதி வரை ... எச்சரிக்கை நோட்டீஸ்

By: vaithegi Sat, 02 July 2022 5:27:13 PM

பிளாஸ்டிக்  தடையை மீறும் நிறுவனங்களுக்கு ஜூலை 10 தேதி வரை ... எச்சரிக்கை நோட்டீஸ்

புதுடெல்லி : உலகம் முழுவதும் அதிக அளவிலான பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டால் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு நேற்றில் இருந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யவோ, உற்பத்தி செய்யவோ கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை மீறி பிளாஸ்டிக் பொருட்களை உபயோகித்தால் குறைந்தது ரூ.1 லட்சம் வரைக்கும் அபராதம் விதிக்கப்படும் அல்லது 5 ஆண்டுகள் வரைக்கும் சிறை தண்டனை விதிக்கப்படும் என சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.

plastic,notice ,பிளாஸ்டிக்  ,நோட்டீஸ்

ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் என கிட்டத்தட்ட 19 பொருட்கள் மீது தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த புதிய தடையை மீறும் நிறுவனங்களுக்கு ஜூலை 10 ஆம் தேதி வரைக்கும் டில்லி அரசு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்படும் என அறிவிப்பு விடுத்துள்ளது.

மேலும், ஜூலை 10 ஆம் தேதிக்கும் பிறகு பிளாஸ்டிக்கை உபயோகிக்கும் நிறுவனங்கள் மீது கடும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்றுப்பொருட்களை அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags :