Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கோவை உட்பட 5 மாவட்டங்களில் கொரோனா அதிகரிக்கும் என எச்சரிக்கை

கோவை உட்பட 5 மாவட்டங்களில் கொரோனா அதிகரிக்கும் என எச்சரிக்கை

By: Nagaraj Wed, 16 Dec 2020 09:32:58 AM

கோவை உட்பட 5  மாவட்டங்களில் கொரோனா அதிகரிக்கும் என எச்சரிக்கை

கோவை உட்பட 5 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரிக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை 4,80,524 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் சராசரி எண்ணிக்கை 6,000 ஆக உள்ளது. இதுவரை தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,012 ஆக உள்ளது. இந்தியாவில் இதுவரை மொத்தமாக கொரோனாவுக்கு 75,062 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை உள்பட பெரும்பாலான நகரங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கலாம் என அச்சம் நிலவி வருகிறது.

additional protection,corona,5th district,localization,increase ,கூடுதல் பாதுகாப்பு, கொரோனா, 5 மாவட்டம், பரவல், அதிகரிப்பு

இதுகுறித்து தலைமை செயலளார் சண்முகம் கூறுகையில், "அடுத்த 15 நாட்களில் கோவை, திருவண்ணாமலை, நாகை, கடலூர், சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் உச்சம் அடைவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இந்த 5 மாவட்டங்களில் கூடுதல் மருத்துவ பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமைதான் அனைத்து மாவட்டக் கலெக்டர்களுக்கு சண்முகம் எழுதி இருந்த கடிதத்தில், "கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளில் தொய்வு ஏற்படக்கூடாது என்றும் கூடுதல் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

Tags :
|