Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கூடுதல் விலைக்கு மதுபானம் விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை

கூடுதல் விலைக்கு மதுபானம் விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை

By: vaithegi Mon, 18 Sept 2023 1:01:29 PM

கூடுதல் விலைக்கு மதுபானம் விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை

சென்னை : தமிழகத்தில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயம் செய்யும் விலையை காட்டிலும் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனாலும், அந்த அறிவிப்பினையும் மீறி மதுபான கடைகளில் சில்லரை விற்பனையை விட ரூ.10 முதல் ரூ.30 வரை கூடுதலாக மதுபானம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கான முக்கிய எச்சரிக்கை தற்போது விடுக்கப்பட்டு உள்ளது.

liquor,price ,மதுபானம் ,விலை

அதாவது, டாஸ்மாக் கடைகளில் அரசின் அறிவிப்பினையும் மீறி கூடுதலாக மதுபானம் விற்பனை செய்தால் அந்த ஊழியர்கள் பணியிலிருந்து உடனடியாக நீக்கம் செய்யப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒவ்வொரு மதுபானத்திற்கும் கூடுதலாக ரூ.10 வசூல் செய்யப்பட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த அறிவிப்பினை ஊழியர்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் அரசின் அறிவிப்பிற்கு மதிப்பு கொடுக்கும்படி அறிவிக்கப்பட்டு உள்ளது.


Tags :
|