Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை

சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை

By: vaithegi Tue, 20 Dec 2022 6:18:05 PM

சூறாவளிக்காற்று  வீசக்கூடும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை

சென்னை: மீனவர்களுக்கான எச்சரிக்கை 20.12.2022 தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து 21.12.2022 மற்றும் 22.12.2022: குமரிக்கடல் பகுதிகள், தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என அறிவித்துள்ளது.

meteorological center,cyclone ,வானிலை மையம் ,சூறாவளிக்காற்று

மேலும் 23.12.2022: மன்னார் வளைகுடா, தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Tags :