Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விசித்திரமான திருட்டு சம்பவங்கள் குறித்து ஜெர்மன் மக்களுக்கு எச்சரிக்கை

விசித்திரமான திருட்டு சம்பவங்கள் குறித்து ஜெர்மன் மக்களுக்கு எச்சரிக்கை

By: Nagaraj Fri, 07 Apr 2023 10:28:14 AM

விசித்திரமான திருட்டு சம்பவங்கள் குறித்து ஜெர்மன் மக்களுக்கு எச்சரிக்கை

ஜெர்மன்: ஜெர்மனிய நாட்டில் இடம்பெற்ற விசித்திரமான திருட்டு சம்பவங்கள் தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியின் எஸன் நகரத்தில் அண்மை காலங்களாக நில கால்வாய்களுக்காக போடப்படுகின்ற இரும்பு மூடிகளை திருடிச் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரியவந்திருக்கின்றது. அதாவது இந்த வருடம் இது வரை மட்டும் இவ்வகையாக 200 இரும்பு மூடிகளை திருடிச் சென்றுள்ளதாக தெரியவந்திருக்கின்றது.

இவ்வாறு எடுப்பதன் மூலம் இவ்வாறு களவுகளை செய்கின்றவர்கள் சாதாரண பாதசாரிகளுக்கு ஆபத்தான சூழ்நிலைகளை ஏற்படுத்துகின்றார்கள் என்பதுடன் அப்பிரதேசத்தில் மக்கள் அசௌகரீகத்தை எதிர்நோக்கி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

germany,iron cap,theft,city of essen,thinking ,ஜெர்மனி, இரும்பு மூடி, திருட்டு, எஸன் நகரம், யோசிப்பு

அதாவது இவர்கள் பழைய இரும்புகளை விற்பனை செய்யும் நோக்கத்துடன் இவ்வாறு இந்த இரும்பு மூடிகளை களவெடுத்து விற்பனை செய்ய முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். கெல்ஸ்ன்கிறிஸனில் கூட அண்மையில் இவ்வாறான ஒரு சம்பவம் நடைபெற்றதாக தெரியவந்திருக்கின்றது.

அதன்படி கடந்த வாரத்தில் மட்டும் 50 இவ்வகையான இரும்பு மூடிகள் எஸன் நகரத்தில் களவாடப்பட்டுள்ளது. இதன் காரணமாக எதிர்வரும் காலங்களில் இதை தடைசெய்வதற்காக நகர நிர்வாகமானது சில உக்திகள் பற்றி யோசித்து வருவதாகவும் தெரியவந்திருக்கின்றது.

Tags :
|