Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஒற்றை யானை ஆக்ரோஷமாக சுற்றித்திரிவதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

ஒற்றை யானை ஆக்ரோஷமாக சுற்றித்திரிவதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

By: Nagaraj Fri, 18 Sept 2020 6:03:52 PM

ஒற்றை யானை ஆக்ரோஷமாக சுற்றித்திரிவதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

சுற்றித்திரியும் ஒற்றை யானை... ஏ.செட்டிப்பள்ளி அருகே, ஒற்றை யானை ஆக்ரோஷமாக சுற்றித்திரிவதால், பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே நீண்ட நாட்களாக ஒற்றை யானை முகாமிட்டுள்ளது. இரவில் வனத்தை விட்டு வெளியேறி, அருகிலுள்ள கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.

பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் நடமாடி வந்த ஒற்றை யானை குண்டுகுறுக்கி வழியாக ஏ.செட்டிப்பள்ளிக்கு இடம் பெயர்ந்தது. மேலும், குண்டுகுறுக்கி, எலசேபள்ளி, கொரகுறுக்கி, கானலட்டி ஆகிய பகுதிகளில் சுற்றித்திரிந்து வருகிறது. இதனால், இப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

single elephant,alert,farmland,aggression ,ஒற்றை யானை, எச்சரிக்கை, விவசாய நிலம், ஆக்ரோஷம்

இந்த யானை மிகவும் ஆக்ரோஷமாக உள்ளதால், ஏ.செட்டிப்பள்ளி, எலசேபள்ளி மற்றும் சுற்றுவட்டார மக்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இரவில், விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சவோ, காவலுக்கோ செல்லக்கூடாது. கால்நடைகளை வனத்தையொட்டிய பகுதிகளில், மேய்ச்சலுக்கு விடக்கூடாது.

காலையில் சூரிய உதயத்துக்கு பிறகு, விவசாய நிலங்களுக்கு செல்ல வேண்டும் என, வனத்துறையினர் நேற்று ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர்.

Tags :
|