Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்துக்களை தாக்கிய காங்கிரஸ் தலைவர் கைது செய்யப்பட்டாரா? - உண்மை பின்னணி என்ன ?

இந்துக்களை தாக்கிய காங்கிரஸ் தலைவர் கைது செய்யப்பட்டாரா? - உண்மை பின்னணி என்ன ?

By: Karunakaran Fri, 06 Nov 2020 1:31:41 PM

இந்துக்களை தாக்கிய காங்கிரஸ் தலைவர் கைது செய்யப்பட்டாரா? - உண்மை பின்னணி என்ன ?

கைகளில் விலங்குகளுடன் ஒருவர் நிற்கும் புகைப்படம், புல்லட் மற்றும் கிரீனேடுகள் அடங்கிய மற்றொரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கைது செய்யப்பட்ட நிலையில், நிற்கும் நபர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் எனவும், இவர் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இவர் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் என தெரிகிறது. இந்நிலையில் இந்த வைரல் புகைப்படங்களை ஆய்வு செய்ததில், அசாம் மாநிலத்தில் ஆயுதங்களுடன் காங்கிரஸ் தலைவர் கைது செய்யப்படவில்லை என தெரியவந்துள்ளது. மேலும் இந்த புகைப்படங்கள் ஒன்று வங்கதேசம் மற்றொன்று காஷ்மீரில் எடுக்கப்பட்டது ஆகும்.

congress leader,arrest,hindus,assam ,காங்கிரஸ் தலைவர், கைது, இந்துக்கள், அசாம்

இந்த புகைப்படங்கள் மே 2018 வாக்கில் பதிவேற்றம் செய்யப்பட்ட பல்வேறு செய்தி தொகுப்புகளில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. புகைப்படத்தில் இருப்பது வங்கதேசத்தை சேர்ந்த மொபாரக் ஹூசைன் என்பதும் இவர் பாலியல் குற்றச்சாட்டு காரணமாக கைது செய்யப்பட்டார் என தெரியவந்துள்ளது.

அதன்படி, வைரல் புகைப்படத்தில் இருப்பது அசாம் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் தலைவர் இல்லை என்பது உறுதியாகிவிட்டது. மேலும் இரண்டாவதாக உள்ள படம் புல்லட் மற்றும் கிரீனேடுகள் அடங்கிய மற்றொரு புகைப்படம் காஷ்மீரில் எடுக்கப்பட்டது ஆகும்.

Tags :
|
|