Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா பாதிப்பு 16 ஆம் நூற்றாண்டிலேயே கணிக்கப்பட்டதா ?- வைரலாகும் தகவலின் பின்னணி

கொரோனா பாதிப்பு 16 ஆம் நூற்றாண்டிலேயே கணிக்கப்பட்டதா ?- வைரலாகும் தகவலின் பின்னணி

By: Karunakaran Mon, 06 July 2020 12:49:32 PM

கொரோனா பாதிப்பு 16 ஆம் நூற்றாண்டிலேயே கணிக்கப்பட்டதா ?- வைரலாகும் தகவலின் பின்னணி

கொரோனா வைரஸ் உலகில் பரவ ஆரம்பித்ததிலிருந்தே கொரோனா குறித்து பல செய்திகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது 16 ஆம் நூற்றாண்டின் பிரெஞ்சு ஜோதிடர் நாஸ்டர்டாமஸ் கொரோனா வைரஸ் பாதிப்பை கணித்ததாக செய்தி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய கணிப்பு நாஸ்டர்டாமஸ் எழுதிய லெஸ் பிராஃபெடிஸ் எனும் புத்தகத்தில் இடம்பெற்று இருப்பதாக அந்த வைரல் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரட்டை (2020)ஆண்டில், ஒரு அரசி (கொரோனா) கிழக்கு பகுதியில் (சீனா) உதித்து, இருள்சூழ்ந்த நேரத்தில் ஏழு மலைகள் கொண்ட நாட்டில் (இத்தாலி) கிறுமிகளை பரப்பி, மக்களின் வைகறையை தூசியாக்கி, உலகில் பாதிப்பை ஏற்படுத்தும் என அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

corona vulnerability,16th century,predicted,corona prevalence ,கொரோனா பாதிப்பு, 16 ஆம் நூற்றாண்டு, கணிப்பு,கொரோனா வைரஸ்

இதுகுறித்து ஆய்வு செய்ததில், அதில் குறிப்பிடப்பட்டு இருப்பதை நிரூபிக்கும் தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. மேலும் அந்த பதிவில் உள்ளது லெஸ் பிராஃபெடிஸ் புத்தகத்தில் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. உண்மையில் லெஸ் பிராஃபெடிஸ் குவாட்ரெயின் முறையில் எழுதப்பட்டுள்ளது.

இதன் மூலம் வைரலாகும் தகவல் உண்மை இல்லை என தெரிய வந்துள்ளது. குவாட்ரெயின் முறை என்பது நான்கு வரிகள் கொண்ட செய்யுள் வடிவம் ஆகும். ஆனால் இந்த பதிவில் மாறாக எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகில் கொரோனா வைரஸ் பாதிப்பை நாஸ்டர்டாமஸ் 16 ஆம் நூற்றாண்டில் கணிக்கவில்லை என்பது தெளிவாகிவிட்டது.

Tags :