Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஒகேனக்கல்லில் இன்று நீர்வரத்து 2 லட்சத்து 10 ஆயிரம் கனஅடியாக உயர்வு

ஒகேனக்கல்லில் இன்று நீர்வரத்து 2 லட்சத்து 10 ஆயிரம் கனஅடியாக உயர்வு

By: vaithegi Wed, 31 Aug 2022 4:03:22 PM

ஒகேனக்கல்லில் இன்று நீர்வரத்து  2 லட்சத்து 10 ஆயிரம் கனஅடியாக  உயர்வு

மேட்டூர்: கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் தொடர் மழையால் அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி உள்ளன. இதனையடுத்து அந்த அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு படிப்படியாக உயர்த்தப்பட்டு கொண்டு வருகிறது.

மேலும் 2 அணைகளில் இருந்தும் தற்போது வினாடிக்கு 2 லட்சத்து 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. எனவே இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக உயர்ந்து கொண்டே வருகிறது. ஒகேனக்கல்லில் நேற்று மாலை 1 லட்சத்து 85 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் உயர்ந்து 2 லட்சத்து 10 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.

இதனால் ஒகேனக்கல் காவிரியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மெயின்அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் ஆகிய அனைத்து அருவிகளையும் மூழ்கடித்த படி தண்ணீர் செல்கிறது. அருவிகளுக்கு செல்லும் நடைபாதை, பரிசல் துறையும் தண்ணீர் மூழ்கி உள்ளன.

okanagan,neervarathu ,ஒகேனக்கல்,நீர்வரத்து

ஒகேனக்கல் காவிரியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒகேனக்கல்லில் உள்ள சத்திரம், முதலை பண்ணை, ஊட்டமலை உள்பட பல பகுதிகளில் வீடுகள், விவசாய நிலங்களுக்கும் தண்ணீர் புகுந்துள்ளது. தொடர்ந்து நீர்வரத்து உயர்ந்து வருவதால் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் காவிரியில் வரும் நீர் வரத்தை 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து கொண்டு வருகிறார்கள்.

Tags :