Advertisement

தண்ணீர் திறந்தாங்க... மின்சார உற்பத்தி தொடங்கிட்டாங்க

By: Nagaraj Sun, 19 Nov 2023 7:59:07 PM

தண்ணீர் திறந்தாங்க... மின்சார உற்பத்தி தொடங்கிட்டாங்க

கம்பம்: தண்ணீர் திறப்பு... முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 1000 கன அடி தண்ணீர் ஞாயிற்றுக்கிழமை திறந்து விடப்பட்டது.

அதன் காரணமாக லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்கியது. முல்லைப்பெரியாறு அணையில் சனிக்கிழமை நிலவரப்படி நீர்மட்டம் 133.30 அடியாக இருந்தது. அணைக்குள் நீர் இருப்பு 5,429.30 மில்லியன் கன அடியாகவும், தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் விநாடிக்கு 1050 கன அடியாகவும், அணைக்குள் நீர் வரத்து விநாடிக்கு 2000.83 கன அடியாகவும் இருந்தது.

அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான பெரியாறு அணை, தேக்கடி ஏரியில் மழை பெய்யவில்லை. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 133.70 அடியாக இருந்த நிலையில் அணையிலிருந்து தமிழக பகுதிக்கு தண்ணீர் விநாடிக்கு 1000 கன அடி திறந்து விடப்பட்டது.

power generation,water supply,started,mullai periyar ,மின் உற்பத்தி, தண்ணீர் திறப்பு, தொடங்கியுள்ளது, முல்லை பெரியாறு

அணையிலிருந்து 1000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால் தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்கியது. 90 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியானது.

கடந்த நவ. 5 இல் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது, அதாவது விநாடிக்கு 105 கன அடி தண்ணீர் மட்டும் வெளியேற்றப்பட்டது. அதனால் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் 14 நாள்களுக்கு பின் ஞாயிற்றுக்கிழமை மின்சார உற்பத்தி தொடங்கியுள்ளது.

Tags :