Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கால் அபாய அளவை எட்டும் நீர்மட்டம்

யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கால் அபாய அளவை எட்டும் நீர்மட்டம்

By: Nagaraj Mon, 31 Aug 2020 12:53:30 PM

யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கால் அபாய அளவை எட்டும் நீர்மட்டம்

நீர்மட்டம் உயர்ந்தது... டெல்லியில் யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கால் நீர்மட்டம் உயர்ந்து அபாய அளவை எட்டும் நிலையில் உள்ளது.

அரியானாவின் ஹதினிகுண்ட் அணையில் இருந்து நொடிக்கு நாலாயிரத்து 353 கன அடி நீர் யமுனையில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் ஆற்றின் நீர்மட்டம் கடல் மட்டத்தில் இருந்து 204 மீட்டராக உள்ளது.

flood,yamuna river,danger level,eight lakhs ,வெள்ளம், யமுனை நதி, அபாய அளவு, எட்டு லட்சம்

இன்னும் அரைமீட்டர் உயரத்துக்கு நீர்மட்டம் உயர்ந்தால் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்படும். கடந்த ஆண்டு ஹதினிக்குண்ட் அணையில் இருந்து நொடிக்கு எட்டு லட்சம் கன அடி நீர் திறந்துவிடப்பட்ட போது டெல்லியில் யமுனையில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பாய்ந்தது.

இதுவரை உள்ளதிலேயே அதிக அளவாக 1978ஆம் ஆண்டு 207 மீட்டர் 49 சென்டிமீட்டர் உயரத்துக்கு யமுனையில் வெள்ளம் பாய்ந்தது.


Tags :
|