Advertisement

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21.27 அடியாக உயர்வு

By: Monisha Wed, 18 Nov 2020 10:24:33 AM

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21.27 அடியாக உயர்வு

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 21.27 அடியாக உயர்ந்துள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை பெய்யத்தொடங்கி தீவிரமடைந்து வருகிறது. அதிலும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக மழை வெளுத்து வாங்கியது.

இதன் காரணமாக மாவட்ட ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. தற்போது கனமழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து காரணமாக அதிக அளவு நீர் நிறைந்து கடல் போல் ரம்மியமாக காணப்படுகிறது.

chennai,northeast monsoon,sembarambakkam lake,heavy rain ,சென்னை,வடகிழக்கு பருவமழை,செம்பரம்பாக்கம் ஏரி,கனமழை

நேற்றைய நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரிக்கு 480 கன அடி நீர்வரத்து வந்தது. ஏரியின் நீர்மட்டம் உயரம் 21.17 அடியாகவும், மொத்த கொள்ளளவு 2,898 மில்லியன் கன அடியாகவும் இருந்தது.

இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் 21.27 அடியாக உயர்ந்துள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 480 கன அடி நீர் வந்த நிலையில் தற்போது ஏரிக்கு நீர்வரத்து 505 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் மொத்த கொள்ளளவு 2,926 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.

Tags :