Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மேட்டூர் அணையிலிருந்து கால்வாய் பாசனத்துக்கு இன்று தண்ணீர் திறப்பு

மேட்டூர் அணையிலிருந்து கால்வாய் பாசனத்துக்கு இன்று தண்ணீர் திறப்பு

By: Monisha Mon, 17 Aug 2020 4:52:25 PM

மேட்டூர் அணையிலிருந்து கால்வாய் பாசனத்துக்கு இன்று தண்ணீர் திறப்பு

மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த 1-ந் தேதி, 63.97 அடியாக இருந்தது. ஆனால் கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததை அடுத்து, அங்குள்ள கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பின. இதையடுத்து இந்த இரு அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் மேட்டூர் அணையும் வேகமாக நிரம்பி வந்தது. குறிப்பாக கடந்த 16 நாட்களில் மட்டும் அணை நீர்மட்டம் 35.04 அடி உயர்ந்தது. அதாவது நேற்று காலை நிலவரப்படி அணை நீர்மட்டம் 99.01 அடியாக இருந்தது.

மேட்டூர் அணையில் நீர்மட்டம் இன்று 99.03 அடியாகவும், நீர்இருப்பு 63.59 டி.எம்.சி.யாகவும் இருக்கிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 13 ஆயிரத்து 905 கனஅடியில் இருந்து 14 ஆயிரத்து 182 கனஅடியாக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலையில் கர்நாடக மாநிலத்தில் பருவமழை குறைய தொடங்கி உள்ளது. இருப்பினும் அடுத்த சில நாட்கள் பருவமழை திடீரென தீவிரம் அடைந்து நீர்வரத்து ஓரளவு அதிகரிக்கும் பட்சத்தில் அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

mettur dam,canal,irrigation,water,monsoon ,மேட்டூர் அணை,கால்வாய்,பாசனம்,தண்ணீர்,பருவமழை

மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி கால்வாய் பாசனத்துக்காக தண்ணீர் திறப்பது வழக்கம். இந்த ஆண்டு நிர்வாக காரணங்களுக்காக 16 நாட்கள் காலதாமதமாக கால்வாய் பாசனத்துக்கு இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. இதன்படி இன்று காலை நடைபெறும் கால்வாய் பாசனத்துக்கான தண்ணீர் திறப்பு விழாவில், அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, டாக்டர் சரோஜா, கே.சி.கருப்பணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த பாசனத்தின் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இன்று முதல் 137 நாட்களுக்கு கால்வாய் பாசனத்துக்கு தண்ணீர் தொடர்ந்து திறந்து விடப்படுகிறது. பாசனத்தின் தேவைக்கேற்ப அதிகரித்தும், குறைத்தும் தண்ணீர் திறக்கப்படும். அதிகபட்சமாக வினாடிக்கு 1,000 கனஅடி வரை தண்ணீர் திறந்து விடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|