Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு

குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு

By: Monisha Mon, 15 June 2020 10:54:14 AM

குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு

மேட்டூர் அணையை அடுத்து காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசன வசதிக்காக கல்லணையில் இருந்து நாளை தண்ணீர் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 12-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார். இந்த தண்ணீர் இன்று இரவு கல்லணையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர் ஆகிய மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இருந்து நாளை தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

தண்ணீர் திறப்பது தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ், கல்லணையில் நேற்று ஆய்வு செய்தார்.

cross cultivation,irrigation,kallanai dam,water opening,mettur dam ,குறுவை சாகுபடி,பாசன வசதி,கல்லணை,தண்ணீர் திறப்பு,மேட்டூர் அணை

மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 10,000 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டாலும், மாயனூர் தடுப்பணைக்கு விநாடிக்கு 5,000 கனஅடி வீதமே தண்ணீர் வந்து சேருகிறது. நேற்று மாலை 4 மணியளவில் லாலாபேட்டை அருகேயுள்ள சிந்தலவாடியைக் கடந்து வந்துகொண்டிருந்த தண்ணீர், இன்று காலை 9 மணியளவில் திருச்சி மாவட்டம் முக்கொம்பை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாயனூர் தடுப்பணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் முக்கொம்பில் தேக்கி வைக்கப்படாமல், கல்லணைக்கு அப்படியே திறக்கப்படும்.

Tags :