Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 10 ஆயிரம் கனஅடியாக உயர்வு

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 10 ஆயிரம் கனஅடியாக உயர்வு

By: vaithegi Mon, 21 Aug 2023 12:17:46 PM

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 10 ஆயிரம் கனஅடியாக உயர்வு

மேட்டூர் : மேட்டூர் அணைக்கு கடந்த 5 நாட்களாகவே நீர்வரத்து உயர்ந்துள்ளது. கடந்த 17-ம் தேதி நீர்வரத்து விநாடிக்கு 3 ஆயிரத்து 260 கனஅடியாக இருந்தது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து படிப்படியாக உயர்ந்து நேற்று காலை 8 மணி நிலவரப்படி 13 ஆயிரத்து 159 கனஅடியாக நீர்வரத்து உயர்ந்துள்ளது.

இதனையடுத்து அணையின் நீர்மட்டம் 54.70 அடியாகவும், நீர் இருப்பு 20.90 டிஎம்சியாகவும் இருந்தது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து காணப்பட்டதால் பாசனத்துக்கு 6 ஆயிரம் கனஅடியாக நீர் திறப்பு குறைக்கப்பட்டது.

mettur dam,water supply ,மேட்டூர் அணை,நீர்வரத்து

ஆனால் தற்போது நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியதால், மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் விநாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர் திறப்பு, நேற்று காலை விநாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது. கடந்த 19-ம் தேதி காலை அளவீட்டின் போது விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து மாலை அளவீட்டின்போது 13 ஆயிரத்து 500 கனஅடியாக அதிகரித்தது. இந்தநிலையில் நேற்று காலை அளவீட்டின்போது நீர்வரத்து விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக மேலும் உயர்ந்தது.

Tags :