Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனாவை முடிவுக்கு கொண்டு வருவதில் உறுதியாக இருக்கிறோம் - உத்தவ் தாக்கரே நம்பிக்கை

கொரோனாவை முடிவுக்கு கொண்டு வருவதில் உறுதியாக இருக்கிறோம் - உத்தவ் தாக்கரே நம்பிக்கை

By: Karunakaran Tue, 07 July 2020 1:47:10 PM

கொரோனாவை முடிவுக்கு கொண்டு வருவதில் உறுதியாக இருக்கிறோம் - உத்தவ் தாக்கரே நம்பிக்கை

இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் 25-ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் தற்போது வரை கொரோனா கட்டுக்குள் வரவில்லை. ஊரடங்கு காரணமாக பெரும் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது.

மீண்டும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. இதனால் மேலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. நாட்டிலே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா மாநிலம் உள்ளது. இந்நிலையில் மும்பையில் பிளாஸ்மா சிகிச்சை திட்டத்தின் கீழ் மாநகராட்சிக்கு 20 ஆம்புலன்ஸ், 100 வெண்டிலேட்டர்கள் மற்றும் ரூ.10 கோடி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

uttav thackeray,maharastra,corona virus,end of the corona ,உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிரா, கொரோனா வைரஸ், கொரோனாவின் முடிவு

இதில் பங்கேற்ற முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, கொரோனா நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வருவதில் நாம் அனைவரும் உறுதியாக இருக்கிறோம். மக்களும், பெரிய தொழில்முனைவோர்களும் அரசாங்கத்துடன் தோளோடு தோள் கொடுத்து போராடி வருகின்றனர். எல்லோரும் அயராது உழைக்கிறோம். இது வெற்றியை உறுதி செய்யும். நாம் கொரோனாவை தோற்கடிப்போம் என்று கூறினார்.

இதில் பங்கேற்ற மந்திரி ஆதித்ய தாக்கரே பேசியபோது, இந்த ஆம்புலன்சுகள் மற்றும் வென்டிலேட்டர்களை பயன்படுத்தும் நேரம் வரக்கூடாது என பிரார்த்தனை செய்கிறேன். ஆனால் அவை தேவைப்படும் நேரத்தில் உயிர்களை காப்பாற்ற பயனுள்ளதாக இருக்கும் என்று கூறினார்.

Tags :