Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டிக் டாக் நிறுவனத்தை வாங்குவது தொடர்பாக ஆய்வு செய்து வருகிறோம் - மைக்ரோசாப்ட் அறிவிப்பு

டிக் டாக் நிறுவனத்தை வாங்குவது தொடர்பாக ஆய்வு செய்து வருகிறோம் - மைக்ரோசாப்ட் அறிவிப்பு

By: Karunakaran Mon, 03 Aug 2020 12:25:00 PM

டிக் டாக் நிறுவனத்தை வாங்குவது தொடர்பாக ஆய்வு செய்து வருகிறோம் - மைக்ரோசாப்ட் அறிவிப்பு

லடாக் எல்லை மோதலுக்கு பின் தேசிய பாதுகாப்பு கருதி இந்திய அரசு 59 சீன செயலிகளை தடை விதித்தது. இதில் பிரபல டிக் டாக் செயலியும் அடங்கும். தற்போது சீனாவுக்குச் சொந்தமான பிரபல டிக் டாக் நிறுவனத்தை அமெரிக்காவில் தடை செய்ய உள்ளதாக அமெரிக்கா அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

உலக அளவில் டிக் டாக் செயலி மிகவும் பிரபலமானதாகும். தற்போது அமெரிக்காவிலும் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கும் அபாயம் ஏற்பட்டதையடுத்து மாற்று வழிகளை டிக் டாக் நிறுவனத்தின் தாய் அமைப்பான பைட் டான்ஸ் நிறுவனம் யோசிக்கத் தொடங்கியுள்ளது. டிக் டாக் நிறுவனத்தின் அமெரிக்க செயல்பாடுகளை மட்டும் விற்பனை செய்ய பைட் டான்ஸ் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

investigating,acquisition,tic tok,microsoft ,ஆய்வு, கையகப்படுத்தல், டிக் டோக், மைக்ரோசாப்ட்

கடந்த சில தினங்களாக இதன் அமெரிக்கா உரிமத்தை பிரபல மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், டிக் டாக் செயலிக்கு தடை விதிப்பதில் டிரம்ப் உறுதியாக இருந்ததால் பைட் டான்ஸ் நிறுவனத்துடனான பேச்சுவார்த்தையை மைக்ரோசாப்ட் நிறுவனம் நிறுத்தி வைத்ததாக தகவல் வெளியாகி இருந்தது.

தற்போது அமெரிக்க அதிபர் டிரம்பை மைக்ரோசாப்ட் சி.இ.ஓ. சத்ய நாதெள்ளா சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்புக்கு பின், மைக்ரோசாப் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், டிக் டாக் நிறுவனத்தை வாங்குவது தொடர்பாக ஆய்வுசெய்து வருகிறோம். இதுதொடர்பாக மைக்ரோசாப்ட் பேச்சுவார்த்தைக்கு தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :