Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரதமர் மோடி வருகையை மிகவும் ஆவலோடு எதிர்நோக்கியுள்ளோம்

பிரதமர் மோடி வருகையை மிகவும் ஆவலோடு எதிர்நோக்கியுள்ளோம்

By: Nagaraj Thu, 15 June 2023 11:08:01 PM

பிரதமர் மோடி வருகையை மிகவும் ஆவலோடு எதிர்நோக்கியுள்ளோம்

வாஷிங்டன்: பிரதமர் மோடியின் வருகையை தாங்கள் மிகவும் ஆவலோடு எதிர்நோக்கியுள்ளோம் என்று ஜான் கிர்பி தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் அழைப்பின் பேரில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 21 முதல் ஜூன் 24 வரை அமெரிக்கா செல்கிறார். அங்கு, ஜூன் 22-ம் தேதி, பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மற்றும் அவரது மனைவி ஜில் பிடன் முன்னிலையில் சுமார் 7,000 இந்திய-அமெரிக்கர்கள் முன்னிலையில் வரவேற்பு அளிக்கப்படும்.

அன்றைய தினம், அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் (பிரதிநிதிகள் சபை மற்றும் செனட்) அழைப்பின் பேரில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். இதன் மூலம் அமெரிக்க காங்கிரஸ் கூட்டத்தில் உரையாற்றும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெறுவார்.

america,information,modi,prime minister,visit,white house, ,அமெரிக்கா, தகவல், பிரதமர், மோடி, வருகை, வெள்ளை மாளிகை

பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தை எதிர்பார்த்து காத்திருப்பதாக வெள்ளை மாளிகை சார்பில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தகவல் தொடர்பு கண்காணிப்பாளர் ஜான் கிர்பி தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:- “இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே சிறப்பான ராணுவ ஒத்துழைப்பு நிலவுகிறது.

மேலும் குவாட் அமைப்பிற்குள் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பர ஒத்துழைப்பு நிலவி வருகிறது. பிரதமர் மோடியின் வருகையை தாங்கள் மிகவும் ஆவலோடு எதிர்நோக்கியுள்ளோம்” என்று ஜான் கிர்பி தெரிவித்திருக்கிறார்.

Tags :
|
|