Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அக்னி நட்சத்திரம் முடிந்தும் 6 இடங்களில் சதமடித்த வெயில்

அக்னி நட்சத்திரம் முடிந்தும் 6 இடங்களில் சதமடித்த வெயில்

By: Nagaraj Fri, 29 May 2020 10:47:33 PM

அக்னி நட்சத்திரம் முடிந்தும் 6 இடங்களில் சதமடித்த வெயில்

மழை விட்டாலும் தூவானம் விடவில்லை என்பார்கள், அதுபோல் தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையிலும் இன்று 6 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது மக்களை திணற அடித்துள்ளது.

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் தமிழகத்தில் மே மாதம் 4ம் தேதி தொடங்கியது. நேற்றுடன் இது நிறைவடைந்தது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் 6 இடங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட் -ஐ தாண்டி பதிவாகியுள்ளது.

rain,happiness,vail,saturn,cooling ,மழை, மகிழ்ச்சி, வெயில், சதம், குளிர்ச்சி

அதன்படி தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக வேலூரில் 104.5 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியிருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக சென்னை மீனம்பாக்கம் 104, திருச்சி 102.2, புதுச்சேரி 101.1, கடலூர் 100.5, கரூர் பரமத்தி 100.4 ஆகிய இடங்களில் டிகிரி பாரன்ஹீட்டாக வெப்பம் பதிவாகியிருக்கிறது.

இதற்கிடையில் தமிழகத்தின் பல இடங்களில் மிதமானது முதல் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ததால் குளிர்ச்சி ஏற்பட்டு மக்கள் மகிழ்ச்சியும் அடைந்தனர்.

Tags :
|
|
|