Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளோம்... செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்ஷி தகவல்

எங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளோம்... செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்ஷி தகவல்

By: Nagaraj Sat, 15 Oct 2022 11:19:03 AM

எங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளோம்... செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்ஷி தகவல்

புதுடெல்லி: இந்திய எதிர்ப்பு சக்திகளின் இந்த வாக்கெடுப்புக்கு எங்களின் எதிர்ப்பு அனைவரும் அறிந்ததே. இது கனடிய அரசாங்கத்திற்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று
வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்ஷி தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தை தனி மாநிலமாக அறிவிக்கக்கோரி சீக்கிய பயங்கரவாதிகளின் காலிஸ்தான் அமைப்பு போராடி வருகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ் என்ற அமைப்பு காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்து வருகிறது.

இந்நிலையில், பஞ்சாபை தனி மாநிலமாக அறிவிப்பது தொடர்பாக, கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் கடந்த மாதம் 18ம் தேதி அந்த அமைப்பு வாக்கெடுப்பு நடத்தியது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.

khalistan,organization,spokesperson,terrorists ,இந்திய, கனடா, வாக்கெடுப்பு, வெளியுறவு அமைச்சகம்

இந்நிலையில், 2வது கட்டமாக அடுத்த மாதம் (நவம்பர்) 6ஆம் தேதி மீண்டும் வாக்கெடுப்பு நடத்த உள்ளதாக நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பு அறிவித்துள்ளது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்ஷி கூறுகையில், “இந்திய எதிர்ப்பு சக்திகளின் இந்த வாக்கெடுப்புக்கு எங்களின் எதிர்ப்பு அனைவரும் அறிந்ததே. இது கனடிய அரசாங்கத்திற்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை நாங்கள் ஏற்கனவே பகிரங்கமாக பகிர்ந்து கொண்டோம் என்றார்.

Tags :