Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனாவை தடுக்க மருந்து கண்டுபிடித்துள்ளோம்; சீனா ஆய்வகம் தகவல்

கொரோனாவை தடுக்க மருந்து கண்டுபிடித்துள்ளோம்; சீனா ஆய்வகம் தகவல்

By: Nagaraj Wed, 20 May 2020 4:10:00 PM

கொரோனாவை தடுக்க மருந்து கண்டுபிடித்துள்ளோம்; சீனா ஆய்வகம் தகவல்

தடுப்பூசியே இல்லை... ஆனால் கொரோனாவை தடுக்க மருந்தை கண்டுபிடித்துள்ளோம் என்று சீனா ஆய்வகம் அறிவித்துள்ளது.

உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரசை தடுக்க தடுப்பூசி மற்றும் மருந்தை கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. சீனாவும் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி இல்லாமலேயே கொரோனாவை தடுக்க மருந்து ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக சீனா ஆய்வகம் தெரிவித்துள்ளது.

university,corona,pharmaceutical,innovation,china ,பல்கலைக்கழகம், கொரோனா, மருந்து, கண்டுபிடிப்பு, சீனா

சீனாவின் முன்னணி பல்கலைக்கழகமான பீக்கிங் பல்கலைக்கழக ஆய்வகத்தில் விஞ்ஞானிகள் இந்த மருந்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த மருந்து மூலம் கொரோனா வைரசில் இருந்து பாதிக்கப்பட்ட நபர் குணமடைவது மட்டுமல்ல, கொரோனாவுக்கு எதிராக குறுகிய காலத்துக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும் பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதித்த எலியின் உடலில் இந்த மருந்தை செலுத்திய போது 5 நாட்களில் வைரஸ் எண்ணிக்கை பல மடங்கு குறைந்தது. இந்த ஆண்டு இறுதியில் இந்த மருந்து தயாராகி விடும் என்று சீன பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

university,corona,pharmaceutical,innovation,china ,பல்கலைக்கழகம், கொரோனா, மருந்து, கண்டுபிடிப்பு, சீனா

விஞ்ஞானி சன்னிஜி தலைமையிலான குழு இந்த மருந்தை உருவாக்கி உள்ளது. முதலில் விலங்குகளுக்கு இதை கொடுத்து பரிசோதிக்கப்பட்டது. பின்னர் இந்த மருந்து 19 கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்டது. வைரசுக்கு எதிராக இந்த மருந்து தீவிரமாக போராடுகிறது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கிறது. உடலில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு சக்தியையும் நடுநிலையாக்குகிறது. இந்த மருந்து 5 நாட்களில் வைரசின் எண்ணிக்கையான 2500-க்கும் கீழ் குறைகிறது என்று பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|