Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தேர்தல் வாக்குறுதிகள் 70 சதவீதம் நிறைவேற்றியுள்ளோம். மீதமுள்ள 30 சதவீதம் விரைவில் நிறைவேற்றுவோம் .. மு.க.ஸ்டாலின்

தேர்தல் வாக்குறுதிகள் 70 சதவீதம் நிறைவேற்றியுள்ளோம். மீதமுள்ள 30 சதவீதம் விரைவில் நிறைவேற்றுவோம் .. மு.க.ஸ்டாலின்

By: vaithegi Thu, 01 Sept 2022 12:39:49 PM

தேர்தல்  வாக்குறுதிகள் 70 சதவீதம் நிறைவேற்றியுள்ளோம். மீதமுள்ள 30 சதவீதம் விரைவில் நிறைவேற்றுவோம்  ..  மு.க.ஸ்டாலின்

கோவை: கோவை கொடிசியா வளாகத்தில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி இல்ல திருமண விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார் அதன் பின் திருமண விழாவில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:- மணமக்களை வாழ்த்த வாய்ப்பு கிடைத்தற்க்கு நன்றி.

தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என பொய்யான குற்றச்சாட்டை கூறுகிறார் எடப்பாடி பழனிசாமி. திமுக ஆட்சி அரசியல் ஆட்சி கிடையாது.

இபிஎஸ் தொகுதியாக இருந்தாலும் மக்கள் பிரச்சினையை நாங்கள் தீர்த்து வைக்கிறோம். 70% வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம், மீதம் எஞ்சிய 30% வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்றுவோம்.

m. k. stalin,election promises , மு.க.ஸ்டாலின்,தேர்தல்  வாக்குறுதிகள்

இதை அடுத்து மக்கள் என்னிடம் மனு கொடுத்துவிட்டு நன்றி என்று சொல்கின்றனர். மனு மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன்பே அவர்களுக்கு அந்த நம்பிக்கையை கொடுத்துள்ளோம்.

மேலும் இது தான் திராவிட மாடல் ஆட்சி. நிதிப்பிரச்சினையை சீரமைத்த பின் மகளிருக்கான உரிமைத்தொகை மாதம் ரூ 1000 விரைவில் வழங்கப்படும் என அவர் கூறினார்.

Tags :