Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் இருந்து எங்களுக்கு பெரும் ஆதரவு உள்ளது - டிரம்ப்

இந்தியாவில் இருந்து எங்களுக்கு பெரும் ஆதரவு உள்ளது - டிரம்ப்

By: Karunakaran Sun, 06 Sept 2020 09:34:03 AM

இந்தியாவில் இருந்து எங்களுக்கு பெரும் ஆதரவு உள்ளது - டிரம்ப்

உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. கொரோனா கட்டுக்குள் இன்னும் வரவில்லை. இந்நிலையில் கொரோனாவுக்கு மத்தியில் அமெரிக்காவில்நவம்பர் மாதம் 3-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் 2-வது முறையாக போட்டியிடுகின்றார்.

மேலும் இந்த தேர்தலில் அவரை எதிர்த்து ஜனநாயக கட்சியின் சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடனும் களமிறங்குகிறார். மேலும் அந்த கட்சியின் சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுகின்றார். இதனால் அமெரிக்காவில் உள்ள இந்தியர்களின் வாக்கு ஜனநாயக கட்சிக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

india,trump,america,presidental election ,இந்தியா, டிரம்ப், அமெரிக்கா, ஜனாதிபதி தேர்தல்

இருப்பினும் குடியரசு கட்சியினரும் அமெரிக்க வாழ் இந்தியர்களின் வாக்குகளை கவர தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது, நடக்க இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் தனக்கே வாக்களிப்பார்கள் என வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இந்தியாவில் இருந்து எங்களுக்கு பெரும் ஆதரவு உள்ளது. பிரதமர் மோடியிடம் இருந்து எங்களுக்கு பெரும் ஆதரவு உள்ளது. அமெரிக்க வாழ் இந்தியர்களின் வாக்கு இந்த ஜனாதிபதி தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும். அவர்கள் எனக்கே வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார்.

Tags :
|
|