Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரஷ்யாவுக்கு ஆயுத ஏற்றுமதி செய்ய எங்களுக்கு உரிமை உள்ளது

ரஷ்யாவுக்கு ஆயுத ஏற்றுமதி செய்ய எங்களுக்கு உரிமை உள்ளது

By: Nagaraj Fri, 23 Sept 2022 4:19:53 PM

ரஷ்யாவுக்கு ஆயுத ஏற்றுமதி செய்ய எங்களுக்கு உரிமை உள்ளது

வடகொரியா: ரஷ்யாவுக்கு ஆயுத ஏற்றுமதி செய்ய நாங்கள் முடிவு செய்தாலும் கூட அதற்கு எங்களுக்கு உரிமை உள்ளது என்று அமெரிக்காவுக்கு வடகொரியா பதிலடி தந்துள்ளது.

ரஷ்யா – உக்ரைன் இடையேயான 7 மாத போர் நீடிப்பை தொடர்ந்து, உலக நாடுகள் போரை நிறுத்த வலியுறுத்திகொண்டிருக்கும் சூழலில் உக்ரைக்கு ஆயுத உதவிகளுக்காக அமெரிக்கா கூடுதல் நிதியை ஒதுக்கியது சலசலப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, போரில் ரஷ்யாவுக்கு அணுஆயுதங்கள் கொடுத்து வடகொரியா உதவுவதாக குற்றம்சாட்டி உள்ளது அமெரிக்கா.

ownership,russia,arms exports,us,north korea,answer ,உரிமை, ரஷ்யா, ஆயுத ஏற்றுமதி, நாங்கள், வடகொரியா, பதில்

ஆனால் அமெரிக்காவின் குற்றச்சாட்டை வடகொரியா முற்றிலுமாக மறுத்துள்ளது. அமெரிக்கா, பொறுப்பற்ற கருத்துகளை கூறுவதை நிறுத்த வேண்டும். உக்ரைனில் நடந்த போரின்போது ரஷ்யாவிற்கு எந்த ஆயுதங்களையும் நாங்கள் ஏற்றுமதி செய்யவில்லை. இனி செய்யும் எந்த திட்டமும் இல்லை.

ஒருவேளை ரஷ்யாவுக்கு ஆயுத ஏற்றுமதி செய்ய நாங்கள் முடிவு செய்தாலும் கூட அதற்கு எங்களுக்கு உரிமை உள்ளது. ஆனால் வட கொரியாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சியை அமெரிக்கா நிறுத்த வேண்டும்“ என்று வட கொரியா பதில் கூறியுள்ளது.

Tags :
|
|