Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எங்கள் மருந்துக்கு மிக விரைவில் அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம் - சீரம் நிறுவனர்

எங்கள் மருந்துக்கு மிக விரைவில் அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம் - சீரம் நிறுவனர்

By: Karunakaran Wed, 23 Dec 2020 1:39:12 PM

எங்கள் மருந்துக்கு மிக விரைவில் அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம் - சீரம் நிறுவனர்

இந்தியாவில் தடுப்பூசிகளை பயன்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. இதுவரை இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் எதுவும் தடுப்பூசிகளை முழுமையாக சோதனை நடத்தி முடிக்கவில்லை. அதே நேரத்தில் அமெரிக்காவில் பைசர், மாடர்னா, ரஷியாவில் ஸ்புட்னிக் நிறுவனம் தயாரித்த மருந்துகள் முழு சோதனைகள் முடிந்து தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

அமெரிக்காவின் பைசர் நிறுவனம் தயாரித்துள்ள மருந்தை இந்தியாவில் பயன்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் அதற்கு முன்னதாக இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்துள்ள மருந்து இந்தியாவில் பயன்பாட்டுக்கு வந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து, பிரான்ஸ் நாட்டில் இதன் சோதனைகள் நடத்தப்பட்டதில் முழு வெற்றியை பெற்றுள்ளது. இது 90 சதவீதம் சிறப்பாக செயல்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

serum founder,corona vaccine,india,corona virus ,சீரம் நிறுவனர், கொரோனா தடுப்பூசி, இந்தியா, கொரோனா வைரஸ்

இந்த மருந்தை இந்தியாவில் தயாரிப்பதற்கு புனேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் மருந்து நிறுவனம் அனுமதி பெற்றிருந்தது. இதை இந்தியாவில் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என சீரம் நிறுவனம் மத்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்திடம் அனுமதி கேட்டு இருந்தது. இது சம்பந்தமாக கொரோனா கட்டுப்பாட்டு நிபுணர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இங்கிலாந்து அனுமதித்து விட்டால் உடனே இந்தியாவிலும் அந்த மருந்துக்கு அனுமதி அளிக்க தயாராக உள்ளனர்.

இதுகுறித்து சீரம் நிறுவன தலைமை நிலைய அதிகாரி ஆதர்பூன வல்லா கூறுகையில், எங்கள் மருந்துக்கு மிக விரைவில் அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். ஜனவரி மாதத்தில் இது பயன்பாட்டுக்கு வந்து விடும் என்று தெரிவித்தார். சீரம் நிறுவன நிபுணர் குழுவின் தலைவர் வினோத்பால் கூறுகையில், சீரம் நிறுவனம் மட்டுமே முழு சோதனை தகவல்களையும் வழங்கி இருக்கிறது. நிபுணர் குழு மருந்தின் மீது முழு திருப்தி அடைய வேண்டும். அதன் திறன் மற்றும் பாதுகாப்பு முழுமையாக இருப்பதாக உறுதியானால் அனுமதி அளிக்க வாய்ப்புள்ளது என்று கூறினார்.


Tags :
|