Advertisement

அறிவியல் பூர்வமாக எண்கணிதம் குறித்த தகவல்களை அறிவோம்

By: Nagaraj Sun, 16 Aug 2020 11:33:46 AM

அறிவியல் பூர்வமாக எண்கணிதம் குறித்த தகவல்களை அறிவோம்

ஒருவரின் வாழ்க்கையில் நன்மை தீமையை வாரி வழங்கும் தன்மை 0-9 வரை உள்ள எண்களுக்கு நிச்சயம் உண்டு, இதில் சுய ஜாதகத்தில் ராசி மற்றும் லக்கினத்திற்கும் எவ்விதத்திலும் சம்பந்தம் இல்லை, சுய ஜாதகத்தில் உள்ள நவகிரகங்களுக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை.

நீங்கள் பிறந்த தேதியை அடிப்படையாகக் கொண்டு உங்கள் குணங்களைப் பற்றி விளக்குவதே எண்கணிதம். 1 முதல் 9 வரை பிறந்தவர்கள் அல்லது பெயர் எண் 1 முதல் 9 வரை அமைந்திருப்பவர்களுக்கு, அவரவர்களின் பிறந்த தேதி அல்லது பெயரெண் அடிப்படையில் பலன்களை கணித்துக் கூறுவதே எண்கணிதம் பலன்கள்.

அடிப்படையில் ஒருவரின் பிறந்த தேதியில் 2,7,8 ம் எண்கள் இருப்பின் குறிப்பிட்ட நபர் மேற்கண்ட எண்களின் ஆதிக்கத்தின் கிழ் பயணிக்கும் குறிப்பிட்ட காலம் வரை மிகுந்த இன்னல்களுக்கும் தொந்தரவுகளுக்கும் ஆட்படும் சூழ்நிலையை தரும், மேற்கண்ட எண்களுக்கு அருகில் இருக்கும் எண்கள் இந்த எண்களுக்கு நட்பு நிலையில் இருப்பின், இந்த எண்களின் பாதிப்பு குறையும்.

arithmetic,prehistory,life,numbers ,எண்கணிதம், அறிவியல் பூர்வம், வாழ்க்கை, எண்கள்

ஒரு வேளை இந்த எண்களுக்கு பகை நிலையில் இருப்பின் பாதிப்பின் தன்மை மிக அதிகமாக இருக்கும்.
எனவே ஒருவரின் பிறந்த தேதியில் ( தேதி, மாதம், வருடம் மற்றும் இவற்றின் கூட்டு எண் ) ஆகியவற்றில் மேற்கண்ட எண்கள் இல்லாமல் இருப்பின் சம்பந்தப்பட்டவர் வாழ்க்கையில் பெரிய அளவில் சிரமங்களை எதிர்கொள்ளாமல் சிறப்பான முன்னேற்றங்களை தனது வாழ்க்கையில் பெறுவார் என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.
இதுகுறித்து மேலும் அறிவியல் பூர்வமான தகவல்கள் தெரிந்து கொள்ள தொடர்பு கொள்ளவும்; 98403 75758

Tags :
|