Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஒவ்வொரு மாதத்திற்கும் நாங்கள் 10 கோடி டோஸ் மருந்துகளை வழங்க திட்டம் - சீரம் நிறுவனம் அறிவிப்பு

ஒவ்வொரு மாதத்திற்கும் நாங்கள் 10 கோடி டோஸ் மருந்துகளை வழங்க திட்டம் - சீரம் நிறுவனம் அறிவிப்பு

By: Karunakaran Sat, 12 Dec 2020 2:31:43 PM

ஒவ்வொரு மாதத்திற்கும் நாங்கள் 10 கோடி டோஸ் மருந்துகளை வழங்க திட்டம் - சீரம் நிறுவனம் அறிவிப்பு

இந்தியாவில் கொரோனா தடுப்பூசியை அவசர பயன்பாட்டுக்கு அனுமதிக்க கோரி 3 தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்கள் அகில இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டிடம் விண்ணப்பித்துள்ளன. இதில் சீரம் மற்றும் பாரத் பயோடெக் தடுப்பு மருந்துகளின் செயல்திறன் குறித்து மேலும் விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது. இதனால் இந்த நிறுவனங்களுக்கு கொரோனா தடுப்பு மருந்துகளை அவசர பயன்பாட்டுக்கு அனுமதி வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த மருந்துகளின் செயல்திறன் குறித்த மேலும் தகவல்களை அளித்த பிறகே அவசர பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்படும். இந்நிலையில் அவசர பயன்பாட்டுக்கு அனுமதி கிடைத்தவுடன் கொரோனா தடுப்பூசி ஜனவரியில் கிடைக்கும் என்று சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகமும், அஸ்ட்ரா ஜெனகா மருந்து நிறுவனமும் இணைந்து கொரோனாவுக்கு எதிரான கோவிஷீல்டு எனும் தடுப்பு மருந்தை தயாரித்துள்ளது.

india,10 crore doses,corona virus,serum company ,இந்தியா, 10 கோடி டோஸ், கொரோனா வைரஸ், சீரம் கம்பெனி

இந்த மருந்தை இந்தியாவில் புனேயில் உள்ள சீரம் நிறுவனம் உற்பத்தி செய்து பரிசோதனை செய்து வருகிறது. இதுகுறித்து சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆதார் பூனவாலா கூறுகையில், இந்த மாத இறுதிக்குள் அவசர பயன்பாட்டுக்கான அனுமதி கிடைக்கும் என்று நம்புகிறோம். இந்த லைசென்ஸ் கிடைத்தவுடன் அடுத்த மாதம் இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து கிடைக்கும். மத்திய அரசு அடுத்த ஆண்டு ஜூலைக்குள் 30 கோடி முதல் 40 கோடி டோஸ் மருந்துகளை கொள்முதல் செய்ய விரும்புகிறது என்று கூறினார்.

மேலும் அவர், அடுத்த ஆண்டில் இருந்து ஒவ்வொரு மாதத்திற்கும் நாங்கள் 10 கோடி டோஸ் மருந்துகளை வழங்க திட்டமிட்டுள்ளோம். அக்டோபர் மாதத்திற்குள் இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு கொரானா தடுப்பூசி செலுத்தப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கிறோம் என தெரிவித்தார் கோவிஷீல்டு தடுப்புப் மருந்தை இந்தியாவில் ரூ.250-க்கு விற்பனை செய்ய சீரம் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

Tags :
|