நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மருத்துவமனையில் அனுமதி
By: Nagaraj Mon, 28 Sept 2020 8:37:14 PM
உடல் நலக்குறைவு காரணமாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனியார் மருத்துவமனையில் சிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இத்தகவல் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட உள்ளது.
மருத்துவ
பரிசோதனைக்கு பின்னர் சீமானின் உடல் நிலைக் குறித்து அறிக்கை வெளியாகலாம்
என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே சீமானின் உடல்நலம் பாதித்த
தகவல்களால் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கவலை அடைந்துள்ளனர். இந்நிலையில்
அவர் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும்
தகவல்கள் வெளியாகி உள்ளது.